நபரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ

Giant Python Viral Video: ராட்சத மலைப்பாம்பின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்த்து, அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 29, 2023, 07:59 PM IST
  • ராட்சத மலைப்பாம்பின் வீடியோ.
  • உயிருடன் இருக்கும் நபரை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு.
  • கிடுகிடுக்க வைக்கும் இன்றைய வைரல் வீடியோ.
நபரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ title=

ராட்சத மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், சில பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதன்படி இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, அதேபோல் சில சமயம் சோகத்தையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ மலைப்பாம்பு தொடர்புடையது, இதில் ஒரு ராட்சத மலைப்பாம்பு, முழு காரையும் தனது பிடியில் எடுத்துக்கொண்டு ஒரு நபரை விழுங்க முயற்சிக்கிறது. மலைப்பாம்பிடம் இருந்து அந்த நபரை காப்பாற்ற இரண்டு பேர் முயற்சிக்கின்றனர்.

மேலும் படிக்க | வகுப்பறையில் இப்படியா செய்றது..மாணவ - மாணவியின் வைரல் வீடியோ

காரின் மேல் இருக்கும் மலைப்பாம்பு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டுக்குள் கார் ஒன்று நிற்பதையும், அதன் மீது ராட்சத மலைப்பாம்பு ஒன்று சுற்றியிருப்பதையும் காணலாம். பின்னர் ராட்சத மலைப்பாம்பு அங்கிருந்த ஒரு நபரை பிடித்து மெதுவாக விழுங்க முயற்சிக்கிறது. மறுபுறம் அவரை காப்பாற்ற இரண்டு நபர்கள் அங்கு போராடுவதையும் நாம் காண முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

ராட்சத மலைப்பாம்பு வீடியோவை இங்கே காணுங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Earth.brains (@earth.brains)

இதற்கிடைகயில், இந்த வீடியோவில் இறக்கும் மலைப்பாம்பு போலி என்று வீடியோவை எடுத்தவர் கூறி உள்ளார். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இந்த காட்சி earth.brains என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்களும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Dicky Snake: டிக்கிக்குள் டிக்கிலோனா செய்யும் பாம்பு! லந்து பண்ணும் பாம்பை லபக்கிய நபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News