அட கடவுளே!! நடுரோட்டில் தகராறு..ஆயுதமான மலைப்பாம்பு: வீடியோ வைரல்
Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் உள்ளம் நடுங்கும் அளவிற்கு பயங்கரமாக உள்ளது. ஏனெனில் இதில் பாம்பின் நிலை மோசமாகி, அடிபட்டவரின் உயிரும் கேள்விக்குறியாகியானது.
இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் மலைப்பாம்பு வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அந்த வகையில் இப்போது நாம் காண உள்ள வீடியோ மலைப்பாம்பை தொடர்பானது.
மேலும் படிக்க | ’மிரள வைக்கும் வேட்டை’ தண்ணீருக்குள் சென்று முதலையை கவ்வும் சிறுத்தை: வைரல் வீடியோ
பொதுவாக மலைப்பாம்புகள் நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன. சிலர் இந்த கொடிய பாம்பை நாய்கள், பூனைகள், பறவைகள் உள்பட பல செல்ல பிராணிகள் போல் ராட்சத பாம்பை தங்களின் வீட்டில் வளர்க்கின்றனர். சில சமயங்களில் இவை மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடும். இதனால் இதை தனியாக ஒரு இடம் வைத்து வளர்த்து வருபவர்கள்.
இந்த நிலையில் சமீபத்திலும் ஒரு மலைப்பாம்பு வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. ஆனால் இது வழக்கமாக பகிரப்படும் வீடியோக்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. தற்போது நாம் காண உள்ள வீடியோ கனடாவின் டொராண்டோ நகரில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு நபர்கள் நடுரோட்டில் கடுமையாக சண்டை போட்டு கொள்வதை நாம் காணலாம். இதற்கிடையில், இதில் ஒருவர் கடுப்பாகி செல்ல பிராணியாக வளர்ந்து வந்த பாம்பை எடுத்து எதிரில் இருந்த மற்றொரு நபரை அட்டாக் செய்கிறார். அவர் அந்த மலைப்பாம்பை வைத்து பல முறை எதிரில் இருந்த நபரை அட்டாக் செய்கிறார். தற்போது இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு ஊடக அறிக்கையின்படி, இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:
இப்படிப்பட்ட காட்சிகள் மிக அரிதானவை. அத்தனை சுலபமாக இவற்றை காண முடியாது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல பயனர்கள் இதை ஒரு அதிர்ச்சி வீடியோ என்று கூறி வருகின்றனர்.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | ஓடி வந்தவரின் சோலியை முடித்த ஒட்டகம்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ