90ml திரைப்படத்தின் ‘மரண மட்ட’ பாடல் வெளியானது!
‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்(தமிழ் )’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார்!
‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்(தமிழ் )’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார்!
தற்போது, ஓவியா ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’ ஆகிய இரு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘குளிர் 100°’ புகழ் அனிதா உதீப் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். '90ml' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.
முன்னதாக இப்படத்தில் இடம்பெற்ற பீர் பிரியாணி என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடல் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ‘மரண மட்டை’ முழு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் வசனங்கள், காட்சிகள் இரட்டை அர்த்தத்தினை கொண்டு இருப்பதால் படத்திற்கு தனிக்கை குழு 'A' சான்று அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.