இன்றைய வைரல் வீடியோ: அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே காணப்ப்படுகின்றது. இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை. நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றை சுற்றி வளைத்து நொறுக்கிக் கொன்று உண்ணும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை உண்ணுகின்றது, ஆனால் நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் முழுகடித்தும் கொல்லும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். 


மேலும் படிக்க | கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ


இந்த நிலையில் இங்கு நாம் காண உள்ள வீடியோவில் அனக்கோண்டா பாம்பு ஒன்று மிகவும் பிரமிப்பூட்டும் விதமாக மரத்தின் கிளைகளை அழகாகக் கடந்து செல்கிறது. இதில் அனக்கோண்டாவின் சுத்த அளவைக் கண்டு நாம் கட்டாயம் மயங்கி போய்விடுவோம். அதன் சுற்றளவு மட்டுமே வாய்பிளக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. அதன் வலிமை மற்றும் மூர்க்கத்தை குறிக்கும் ஒரு வடிவத்தைக் காட்டுகிறது. அதன் பருமனான உடல் சிரமமின்றி மரத்தின் கிளைகளின் வளைந்து நெளிந்து செல்கிறது. இது ஒரு மயக்கும் மற்றும், அதே நேரத்தில், பார்ப்பதற்கு உறைய வைக்கும் காட்சி போல் இருக்கிறது.


மரத்தின் மேல் வளைந்து நெளிந்து ஏறும் அனக்கோண்டாவின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:



 சமூக ஊடக தளங்களில் புயலைக் கிளப்பிய இந்த வசீகர வீடியோவை அம்ரித் உபாத்யாய் என்ற பயனர் Instagram இல் பகிர்ந்துள்ளார். இந்த காட்சிகள் பார்ப்பதற்கே மிகவும் பிரமிப்பூட்டும் விதமாக அமைந்துள்ளது. அந்த அனக்கோண்டா மரத்தின் கிளைகளை அழகாகக் கடந்து செல்கிறது, இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோவை இதுவரை பல லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து வருகின்றனர், அத்துடாண் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பயனர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க | எப்புட்றா... பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் பாம்பு... வைரல் வீடியோ!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ