கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ

Funny Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. இதை பார்க்கும் மக்கள் வாய் பிளந்த படி நிற்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2023, 10:09 AM IST
  • அற்புதமான திறமைகளின் வைரல் வீடியோ.
  • கால்பந்துகளை வைத்து மாயம் செய்யும் இளைஞனின் வீடியோவை இங்கே காணலாம்.
  • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனது.
கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான மற்றும் சாகச வீடியோக்களுக்கென தனி இடம் உள்ளது. 

உலகில் திறமைசாலிகள், தனித்துவமான திறமை பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலரது திறமைகள் வெளிப்படுகின்றன. பலரது திறமைகள் வெளிப்படாமலேயே போய்விடுகின்றன. பலருக்கு திறமையை வெளிப்படுத்த சரியான தளம் கிடைப்பதில்லை. பல சமயங்களில் இப்படிப்பட்டவர்கள் தெருக்களில் தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள். பாடல்களை பாடியோ, நடனமாடியோ அல்லது பல வித தனித்திறமைகள் மூலமாகவோ அவர்கள் மக்களின் இதயங்களை வெல்கிறார்கள். 

சமூக ஊடகங்கள் பெருகியவுடன், அவற்றின் மூலம் இப்படிப்பட்டவர்களில் சிலரது திறமை பலரிடம் போய் சேர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பலரது வாழ்க்கையும் இதன் மூலம் மாறி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அந்த வகையை சார்ந்தது. இதில் வித்தியாசமான ஒரு திறன் படைத்த இளைஞன் செய்யும் செயல்களை காண முடிகின்றது. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் ஒரு இளைஞன் கால்பந்துகளை கொண்டு பல அற்புதமான செயல்களை செய்கிறார். இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. இதை பார்க்கும் மக்கள் வாய் பிளந்த படி நிற்கிறார்கள். இதை வீடியோவில் பார்க்கும் இணையவாசிகளுக்கும் அதே நிலை தான். 

அற்புதமான திறமைகளின் வைரல் வீடியோ

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரே நேரத்தில் ஐந்து கால்பந்துகளுடன் இளைஞர் ஒருவர் மாயம் செய்வது போன்ற காட்சியை காண முடிகின்றது. இவர் ஒரு ரயில்வே பிளாட்பாரத்தில் அமர்ந்து அங்குள்ள மக்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். முதலாவதாக, இந்த இளைஞன் தனது இரண்டு கால்களிலும் கால்பந்துகளை வைத்து, அவற்றை சுற்ற வைக்கிறார். இதற்குப் பிறகு, அவர் பென்சிலின் நுனியில் ஒரு கால்பந்தை வைத்து அதை வட்டமாக சுழற்றத் தொடங்குகிறார், பின்னர் அந்த பென்சிலை தனது வாயால் பிடிக்கிறார். அந்த நபர் இத்துடன் மட்டும் நிற்கவில்லை. அதன் பிறகு அவர் தனது இரண்டு கைகளின் விரல்களிலும் இரு கால்பந்துகளை வைத்து, அவற்றையும் வட்டமாக சுழற்றத் தொடங்குகிறார்.

மேலும் படிக்க | எப்புட்றா... பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் பாம்பு... வைரல் வீடியோ!

கால்பந்துகளை வைத்து மாயம் செய்யும் இளைஞனின் வீடியோவை இங்கே காணலாம்:

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனது

அந்த இளைஞனின் திறமையைக் கண்டு ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். மக்கள் அந்த இளைஞனின் அருகில் சென்று அவரை உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தனர், பின்னர் சிலர் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இந்த வீடியோவை பார்த்தவுடன் நீங்களும் இந்த இளைஞனின் ரசிகராக மாறிவிடுவீர்கள். 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் amit_freestyle_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் 1.73 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கூட கூட வருது!! நிழலை பார்த்து அழுத குழந்தை.... குலுங்க குலுங்க சிரிக்கும் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News