சாப்பாடு விஷயத்தில் யாரேனும் கண்டிஷன் போட்டால், மக்கள் உடனே கொதித்தெழுந்துவிடுவார்கள். ஆனால், நெருங்கிய உறவுகள் என்றால், அவர்கள் போடும் கண்டிஷனுக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கவே செய்வார்கள். ஏனென்றால், பிடித்தவர்களுக்காக உணவை, தியாகம் செய்யலாம் என்ற பெருந்தன்மை அவர்களிடம் இருக்கும். அதேநேரத்தில், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவதை ஒருபோதும் தவறவிடமாட்டார்கள். அப்படியான ஒரு சூழலை எதிர்கொண்ட பெண் ஒருவர், காதலனை ஹேண்டில் செய்தவிதம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 35 வருடம் காதலிக்காக காத்திருந்த ’ரோமியோ’ - 65 வது வயதில் காதலியை கரம்பிடித்தார்


சமூகவலைதளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த ஸ்டோரியில், காதலன் ஒரு சைவ உணவுப் பிரியராக இருந்துள்ளார். அவருக்கு அசைவம் சாப்பிடுவது பிடிக்காது. காதலிக்கு, அசைவம் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படியான சூழலில், அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என காதலன் தெரிவித்துள்ளார். இதனால், மனம் வருந்திய பெண், அசைவம் சாப்பிட மாட்டேன் எனக்கூறி அவரை கரம்பிடித்துள்ளார்.


ALSO READ | ’பிக்பாஸ்’ ஹரிஷ் கொடுத்த வாக்குறுதி - ஆட்டோ ஓட்டும் பெண்கள் ’ஹேப்பி’


கல்யாணம் ஆன பிறகு தன் மனைவி மட்டன் சாப்பிடுவதில்லை என நினைத்துக் கொண்டிருந்துள்ளார் கணவன், ஆனால், மட்டன் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. கடுப்பான கணவன், ஒரு சில முறை அன்பாக கண்டித்துள்ளார். அதற்கும் பலன் கிடைக்காததால் ‘ நான் வேண்டுமா? இல்லை மட்டன் வேண்டுமா? என முடிவு செய்’ எனத் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.


இதில் ஹைலைட் என்னவென்றால், தான் செய்த அத்தனை விஷயங்களையும் கணவன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கல்யாணத்துக்கு முன்பு என்னை பிடிப்பதாக சொன்னவள், இப்போது மட்டன் தான் மிகவும் பிடிக்கிறது எனக் கூறுகிறாள். மட்டன் வேண்டுமா? நான் வேண்டுமா? என அவசரத்தில் கேட்டுவிட்டேன். ஒருவேளை மட்டன் தான் வேண்டும் என கூறிவிட்டால் என் கதி? என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR