35 வருடம் காதலிக்காக காத்திருந்த ’ரோமியோ’ - 65 வது வயதில் காதலியை கரம்பிடித்தார்

கர்நாடகாவில் காதலித்த பெண்ணை 35 வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்ட முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2021, 02:05 PM IST
35 வருடம் காதலிக்காக காத்திருந்த ’ரோமியோ’ - 65 வது வயதில் காதலியை கரம்பிடித்தார் title=

காதலுக்கு கண்கள் இல்லை என சொல்வார்கள். ஆனால், அதற்கு காலநேரமும் இல்லை. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தான் விரும்பிய பெண்ணை கரம் பிடிக்க 35 ஆண்டுகள் காத்திருந்திருந்துள்ளார். அவரது காத்திருப்பு வீண்போகவும் இல்லை. தன்னுடைய 65-வது வயதில், காதலித்த பெண்ணின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

ALSO READ | கிட்னியைக் கொடு என மனைவியை டார்ச்சர் செய்த கணவன்! சிறை கம்பிக்குள் முடக்கம்

மைசூர் பகுதியைச் சேர்ந்த சிக்கண்ணா என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஜெய்யம்மாவைக் காதலித்துள்ளார். ஆனால், ஜெயம்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டது. இதனால், வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே சிக்கண்ணா வாழ்ந்துள்ளார். திருமணமான ஜெயம்மாவுக்கு குழந்தைபேறு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 30வது வயதில் ஜெயம்மாவை விட்டுவிட்டு தாலி கட்டிய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். ஜெயம்மாவும் தனியாகவே வாழ்க்கையை கழித்து வந்துள்ளார்.

ALSO READ | பட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்!!

இப்போது ஜெயம்மாவுக்கு 65 வயதாகிறது. சிக்கண்ணாவும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், ஜெயம்மாவை திருமணம் செய்து கொள்ள அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜெய்யம்மா சம்மதம் தெரிவிக்க, 60 வயதைக் கடந்த முதிய தம்பதிகளின் திருமணம் உறவினர்கள் புடைசூழ சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வாழ்க்கையின் கடைசி பகுதியில் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ள அவர்கள் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு நாள் காதலிக்காக காத்திருந்த சிக்கண்ணாவை, ஸ்பெஷலாக பாராட்டுகள் குவிகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News