பிக்பாஸ் (Bigboss) சீசன் ஒன்றில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ஹரிஷ் கல்யாண், அந்த சீசனுக்குப் பிறகு தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிரியா பவானி சங்கருடன் அவர் இணைந்து நடித்த ‘ ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் அண்மையில் ஒடிடியில் ரிலீஸாகி ஹிட் அடித்தது. இதனால், சினிமாத்துறையின் கவனத்தை ஈர்த்துள்ள ஹரிஷ் கல்யாண், சென்னை வடபழனியில் நடைபெற்ற தயாரிப்பாளர் மற்றும் இளைய தளபதி விஜய்யின் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி செல்வகுமாரின் ’கலப்பை மக்கள் இயக்கத்தின்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ALSO READ | BB-5 நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை உறுதிபடுத்திய கமல்!
இந்த விழாவில் பெருமழையால் பாதிக்கப்பட்ட 150 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹரிஷ், தன்னால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
ALSO READ | பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து?
விரைவில் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு பிரத்யேகமாக ஸ்டாண்டு மற்றும் மொபைல் ஆப் ஒன்றை, பி.டி செல்வகுமாருடன் இணைந்து வடிவமைத்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார். ஹரிஷ் கல்யாண் கொடுத்த இந்த வாக்குறுதியால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டும் பெண்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்னர் பேசிய பி.டி. செல்வகுமார், வறுமையில் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதே கலப்பை மக்கள் இயக்கதின் நோக்கம் எனத் தெரிவித்தார். நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த மக்கள் தொடர்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR