Mithali Raj 10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை
10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் மிதாலி ராஜ்
புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வெள்ளிக்கிழமையன்று சாதனையை பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் மிதாலி ராஜ். லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேட்ஸ்வுமன் மிதாலி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்தியாவுக்காக தனது 212 வது WODI (Women One Day International) விளையாடிக் கொண்டிருந்த மிதாலி 36 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற சாதனையை பதிவு செய்தார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸுக்குப் (England captain Charlotte Edwards) பிறகு 10,000 ரன்கள் எட்டிய இரண்டாவது பெண் என்ற பெருமையை மிதாலி பெற்றார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டில் 10,273 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார், மிதாலி 10,001 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். Suzie Bates 7,849 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
Also Read | விராட் கோலிக்கு ஏன் கோவம் வந்தது? அணிக்கு அவர் அளித்த அறிவுரை என்ன?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர், மிதாலி பத்தாயிரம் ரன்களுக்கு 35 ரன்கள் குறைவாக எடுத்திருந்தார். 35 ரன்களுடன் சாதனையை பதிவு செய்தவுடனே அடுத்த ரன்னுக்கு மிதாலி ஆட்டமிழந்தார். மிதாலி 10 டெஸ்ட் போட்டிகளில் 663 ரன்கள் எடுத்துள்ளார், 89 T20I போட்டிகளில் 2,364 ரன்கள் குவித்துள்ளார். மூத்த இந்திய பேட்ஸ்வுமன் WODI கிரிக்கெட்டில் 6,974 ரன்கள் எடுத்த நிலையில் முன்னணியில் உள்ளார்.
10,000 ரன்கள் என்ற மைல்கல்லை மிதாலி ராஜ் எட்டியதுமே சமூக ஊடக தளங்களில் மிதாலிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வந்து குவிந்தன. ஊற்றப்பட்டன. சச்சின் டெண்டுல்கர், வாசிம் ஜாஃபர் என பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் மிதாலியின் சாதனையை பாராட்டியுள்ளனர்.
"சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை முடித்த மிதாலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய சாதனை ... தொடர்ந்து செல்லுங்கள்!" என டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபரும் சச்சின் உடன் சேர்ந்து மிதாலியின் சாதனைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
"10,000 சர்வதேச ரன்களை எட்டியதற்கு வாழ்த்துக்கள் மிதாலி. இது மாபெரும் சாதனை, உங்கள் உடற்பயிற்சி, திறமை மற்றும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று.
"முதல் அல்லது இரண்டாவது 10,000 ரன்களைப் பெறுவது ஒரு பெரிய விஷயம். அதைச் செய்த முதல் இந்தியர் மிதாலி ராஜ், இந்த சாதனை மிதாலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வளவு மும்முரமாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன். அவரை பார்த்திருக்கிறேன், அணியில் உள்ள அனைவரும் மிதாலியின் சாதனையை நினைத்து பெருமைப்படுகின்றனர்" என்று மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) தெரிவித்தார்.
Also Read | Ind Vs Eng T20I: முதல் T20I தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR