Ind Vs Eng T20I: முதல் T20I தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

அகமதாபாதின் நரேந்திர மோதி அரங்கில் நடைபெற்ற T20I போட்டியில் இந்தியாவின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் T20I போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2021, 08:02 AM IST
  • முதல் T20I போட்டியில் இந்தியாவின் தோல்வி
  • டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது
  • உலகக்கோப்பை போட்டி எதிர்வரும் நிலையில் இந்தியாவின் தோல்வி கவலையை அதிகரிக்கிறது
Ind Vs Eng T20I: முதல் T20I தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா? title=

அகமதாபாதின் நரேந்திர மோதி அரங்கில் நடைபெற்ற T20I போட்டியில் இந்தியாவின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் T20I போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.  

தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, இது ஒரு பேட்டிங் ஷோவுக்கு கீழே இருப்பதை ஏற்றுக்கொண்டார். ஸ்ரேயாஸ் ஐயரைப் (Shreyas Iyer) பாராட்டிய கோலி, நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் இருப்பது போன்ற ஆடுகளத்தில் (Pitch) பேட்டிங் செய்வதற்கான வழியை Shreyas Iyer காட்டினார் என்று ஒத்துக் கொண்டார்.  

Also Read | ஹர்திக் பாண்ட்யா எப்படி செயல்படுவார் என்று கணிக்கும் இந்திய அணியின் vice captain

இதுபோன்ற ஆடுகளத்தில் என்ன செய்வது என்பது குறித்து அணிக்கு தெரியவில்லை என்றும், T20I முதல் போட்டி நடைபெற்ற நாள், இந்தியாவுக்கு ‘சிறந்த’ நாள் அல்ல என்றும் ஒப்புக் கொண்டார். ஷாட்களை சரியாக கையாளதது இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும் கோஹ்லி தெரிவித்தார்.

"அந்த வகையான ஆடுகளத்தில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பேட்ஸ்மேன்களாக நாம் கவனமாக இருக்க வேண்டிய சமயம் இது. வேண்டிய ஒன்று.” என்று கோஹ்லி கூறினார்.  

இது ஒரு பேட்டிங் ஷோவுக்கு கீழே இருப்பதை ஏற்றுக்கொண்டார். ஸ்ரேயாஸ் ஐயரைப் (Shreyas Iyer) பாராட்டிய கோலி, நரேந்திர மோதி ஸ்டேடியத்டில் இருப்பது போன்ற ஆடுகளத்தில் (Pitch) பேட்டிங் செய்வதற்கான வழியை Shreyas Iyer காட்டினார் என்று ஒத்துக் கொண்டார்.  

Also Read | ஸ்டுடியோவில் பத்திரிகையாளர் மீது உள்ளரங்கு இடிந்து விழுந்தது!

"நீங்கள் விரும்பிய ஷாட்களை அடிக்க விக்கெட் உங்களை அனுமதிக்கவில்லை, ஷ்ரேயாஸின் இன்னிங்ஸ் ஆடுகளத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், பவுன்ஸை எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக இருந்தது" என்று கோஹ்லி மேலும் கூறினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்தியா இப்போது 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நரேந்திர மோதி மைதானத்தில்  நடைபெறவிருக்கும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.   

உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும் விராட் கோலி ஒப்புக்கொண்டார்.   

Also Read | விராட் கோலிக்கு ஏன் கோவம் வந்தது? அணிக்கு அவர் அளித்த அறிவுரை என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News