ட்விட்டரில் 55 பெண் பிரபலங்ளை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பின்தொடர்ந்தார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி சமூக வலைதளங்களை சிறப்பாகவும், தீவிரமாகவும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் தனது கருத்துகள், அறிவிப்புகள், நாட்டு மக்களுக்கான செய்திகள் உள்ளிட்டவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டு வருகிறார்.


@narendramodi என்ற பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தை சுமார் 4.37 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதில், சுமார் 2,000 பேரை மோடி பின்தொடர்கிறார். மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @PMO INDIA-வை சுமார் 2.69 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்தப் பக்கத்தில் உலகத் தலைவர்கள் உள்ளிட்ட 438 பேரை பிரதமர் பின்தொடர்கின்றார்.


இந்நிலையில், மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் 55 பெண் பிரபலங்ளை நேற்று பின்தொடர்ந்தார். சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பந்தன் விழா கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், மோடி 55 பெண்களை பின்தொடர்வதைச் செய்துள்ளார்.


இந்த 55 பேரில், பெரும்பாலானோர் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள். அவர்களில், பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா, டென்னிஸ் வீராங்கனைகள் சானியா மிர்ஸா, கார்மன் கவுர் தன்டி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பெண் பத்திரிகையாளர்கள் ஸ்வேதா சிங், பத்மஜா ஜோஷி, ஷாலினி சிங் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.