வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே சொல்லலாம். குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மிக கியூட்டாக இருந்து, இணையவாசிகளின் உள்ளங்களை கொள்ளைகொள்கின்றன. தற்போதும் ஒரு குரங்கு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு குரங்குக்கும் நாய்க்கும் இடையிலான நட்பை காண முடிகின்றது.


ஒரு நாயும் குரங்கும் சிப்ஸ் பாக்கெட்டை திருட ஒன்றுக்கு ஒன்று உதவிக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் இதை மீண்டும் மீண்டும் லூப்பில் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோ பல மாதங்கள் முன்னால் வந்தாலும், இப்போது மீண்டும் வைரல் ஆகி வருகின்றது.


மேலும் படிக்க | புடவையுடன் தாமிரபரணி ஆற்றில் டைவ் அடிக்கும் வீர தமிழச்சி! வைரலாகும் வீடியோ!


வீடியோ வைரலானது


ஒரு கடைக்கு வெளியே சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க நாயும் குரங்கும் முயல்கின்றன. நாயின் முதுகின் மீது ஏறிக்கொண்டு குரங்கு சிப்ஸ் பாக்கெட்டை பிடித்து இழுக்க முயற்சி செய்கிறது. தரனா ஹுசைன் என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 


குரங்கு மற்றும் நாயின் தூள் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. மிக கியூட்டாக இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இவர்கள்தான் சரியான நண்பர்கள்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். "விலங்கு இராச்சியத்தில் மிகப்பெரிய திருட்டு" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார். மற்றொரு நபர், “இவர்களுக்கு சிப்ஸ் பாக்கெட் திருடுவதில் வெற்றி கிடைத்ததா? தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்” என கமெண்ட் செய்துள்ளார். 


மேலும் படிக்க | அய்யோ பாவம்..20 அடி நீள python பாம்புக்கு இப்படி ஒரு சோதனையா..வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ