வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளில் பாம்பு, குரங்கு, சிங்கம், புலி, யானை ஆகிய விலங்குகளுக்கு இணையத்தில் அதிக மவுசு உள்ளது. அதுவும் குரங்குகள் இணையத்தின் ஹீரோக்களாகவே பார்க்கப்படுகின்றன. இவை செய்யும் குறும்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இவற்றில் பல வீடியோக்களை பார்க்க மிக வேடிக்கையாக இருந்தாலும், சிலவற்றை பார்க்க மிக அச்சமாகவும் உள்ளது.


அப்படி அச்சப்பட வைக்கும் வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு குரங்கு ஒரு பெண்ணிடம் செய்யும் செயல், பீதியை கிளப்புவதோடு சிரிப்பையும் வரவழைக்கிறது. 


மேலும் படிக்க | ரோட்டு கடையை தும்சம் செய்த காட்டு யானை, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ


குரங்குகள் தங்கள் செயல்களால் மக்களை அடிக்கடி தொந்தரவு செய்வது வழக்கம். குரங்குகள் சில சமயங்களில் நம் கைகளில் இருக்கும் பொருட்களை பிடுங்கி அவற்றை நாசப்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். சில நேரங்களில் அவை மக்களுடன் மிகவும் விசித்திரமான விஷயங்களையும் செய்வதுண்டு. 


வைரலாகும் இந்த வீடியோவிலும் குரங்கு அப்படித்தான் ஒரு விஷயத்தை செய்திருக்கிறது.  வீடியோவில், ஒரு பாலத்தில் ஒரு பெண் நடந்து செல்வதை காண முடிகின்றது. அப்போது திடீரென ஒரு குரங்கு வந்து அந்த பெண்ணிடம் விசித்திரமாக நடந்து கொள்கிறது. இது மட்டுமின்றி, குரங்கு பெண்ணின் தலைமுடியை மிகவும் மோசமாக பிடித்து இழுக்கிறது. இதனால் அந்த பெண் நிலை தடுமாறி விழத் தொடங்குகிறார். அதற்குள் மற்றொரு நபர் அங்கு வரவே குரங்கு அங்கிருந்து ஓடி விடுகிறது. பெண் எப்படியோ தன்னை சமாளித்துக் கொள்கிறார்.


குரங்கு செய்த சில்மிஷத்தை இந்த வீடியோவில் காணலாம்:


 



வீடியோவைப் பார்த்து அனைவரும் ஒரு கணம் ஆச்சரியப்படுகிறார்கள். அதே சமயம் இந்த வேடிக்கையான காட்சியைப் பார்த்து சிலரால் தங்கள் சிரிப்பையும் அடக்க முடியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'anvuna'என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதேசமயம், ஒரு லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அந்த பெண் மீது பரிதாபப்பட்டு பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  அதே சமயம் சிலர் தங்கள் ஆச்சரியத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அட கடவுளே..4 வயது சிறுவனை தூக்கிய காளை..மனதை பதற வைரக்கும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ