குட்டி குரங்கின் இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என கூறுகின்றனர்.


மேலும் படிக்க | கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ


சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, சற்று வித்யாசமானது என்றே கூறலாம். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அந்த வீடியோவில், குரங்கு ஒரு சலவை செய்பவரைப் போல துணி துவைக்கிறது. சோப்பு தண்ணீர் தேய்த்து துணையை துவைக்கிறது.


அதுமட்டுமின்றி  நம் நமது வீட்டில் எப்படி அடித்து அடித்து துணி துவைப்பார்களோ, அதேபோல், இந்த குரங்கும் துணி துவைத்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. முதலில் துணியை அடித்துத் துவைக்கும் குரங்கு, பின்னர், அதை நீரில் அலசுகிறது. பிறகு ஒரு பிரஷ்ஷை எடுக்கும் குரங்கு அதனால் துணியை நன்றாக தேய்த்து அழுக்கை அகற்ற முயற்சிகிறது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் சிரிக்கும் எமோஜிகளால் கமெண்ட்களை நிரப்பியுள்ளனர்.


துணி துவைக்கும் குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:



குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோ @HasnaZarooriHai என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இனையவாசிகள் இதற்கு பல வித சுவாரசியமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | எப்புட்றா... பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் பாம்பு... வைரல் வீடியோ!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ