வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கை வேட்டையாட முயன்ற புலியின் வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மரத்தின் உச்சியில் புத்திசாலியான குரங்கு ஒன்றை வேட்டையாட முயன்ற புலி படுதோல்வி அடைந்தது. வைரலான இந்த வீடியோவில், ஒரு சிறிய மரத்தின் உச்சியில் ஒரு புலி இருப்பதைக் காண முடிகின்றது. குரங்கு ஒன்று அதன் கீழ் இருக்கிறது. புலி தாக்கும் நிலையில் உள்ளதை பார்க்க முடிகின்றது. ஆனால் மரங்கள் குரங்கின் ஆடுகளம் போன்றவை. இங்கே, புலிகளால் அவற்றின் முழு சக்தியை காட்ட முடியாது. 


குரங்கை சுலபமாக தாக்கி விடலாம் என புலி நினைத்துக்கொண்டிருக்கும் அதே நேரம், புலியை ஏமாற்ற குரங்கு ஒரு நல்ல திட்டத்தை தீட்டி வருகிறது. மிகவும் மெதுவாகவும் குரங்குக்கு தெரியாமலும் புலி குரங்கை நோக்கி கீழே வருகிறது. இதைப் பார்த்த குரங்கு, அச்சப்படுவது போலவும், பயந்து கீழே விழுவது போலவும் நடிக்கிறது. திடீரென மரக்கிளைகளில் தாவி குதித்து குரங்கு மரத்தின் மேலே செல்கிறது. குரங்கின் திடீர் அசைவை பார்த்த புலி, அதை பாய்ந்து பிடிக்க செல்கிறது. ஆனால், குரங்கு மேலே சென்று விடவே, புலி தொப்பென்று கீழே விழுகிறது. 


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் “சூழ்நிலை கைதி" என்று எழுதியுள்ளார். இந்த வீடியோவுக்கு 174k வியூஸ்களும் 8,300 லைக்குகளும் கிடைத்துள்ளன. புலியை பக்காவாக ஏமாற்றிய குரங்கை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். 


புலியை ஏமாற்றிய குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ