வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் பொதுவாக குழுக்களாக வாழ்கின்றன. ஆனால் சிலர் வீட்டிலும் குரங்குகளை வளர்ப்பதுண்டு. இவ்வாறு வளர்க்கப்படும் குரங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான வீடியோக்கள் வளர்ப்பு குரங்குகளைப் பற்றி உள்ளன. மனிதர்கள் செய்யும் பல செயல்களைச் செய்யும் திறன் கொண்ட விலங்குகளில் குரங்குகளுக்கு எப்போதும் முதலிடம் உள்ளது. குரங்குகள் 20 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. சில குரங்குகள் இரண்டு வயதிலேயே முதிர்ச்சி அடைந்து விடுகின்றன. இன்னும் சில குரங்குகள் 10 வயதில் முதிர்ச்சி அடைகின்றன. குரங்குகளின் கர்ப்ப காலம் ஐந்தரை மாதங்கள் வரை இருக்கும்.


மேலும் படிக்க | Hunt Video: அழகாய் இருக்கும் உலகம் ஒரு நொடியில் மரணக்கிணறாய் மாறும் சோகம்! 


சமீபத்தில் வீட்டில் வளர்க்கப்படும் குரங்கு ஒன்றன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. வீடியோவில் குரங்குடன் ஒரு நபரும் காணப்படுகிறார். வீடியோவில் காணப்படும் நபர் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கிறார். சோபாவில் சில செய்தித்தாள்கள் கிடக்கின்றன. அந்த நபர் செய்தித்தாள் படிப்பதை பர்க்கும் குரங்குக்கு தானும் அப்படி செய்ய வேண்டும் என ஆர்வம் வருகிறது. மனிதர்கள் செய்யும் பெரும்பாலான செயல்களை குரங்குகளால் செய்ய முடியும். குரங்கு மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு. அதற்கு இந்த வீடியோவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.


புத்திசாலி குரங்கின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



குரங்கு தனது உரிமையாளருடன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கிறது. செய்தித்தாளை புரட்டிப் புரட்டி குரங்கு படிக்கும் அழகு பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கிறது. அதில் உள்ள செய்திகளை அது டிக் செய்வது போல் குத்திக் குத்தி நோட் செய்கிறது. இது காண்பதற்கு வெகு வேடிக்கையாக உள்ளது. 


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் animals_being_epic என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | சாப்பிடறதைப் பார்த்து கண்ணு போடாதீங்க வயிறு வலிக்கும்! உடும்பு வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ