விபத்தில் உயிர் இழந்த அம்மா.. கதறி அழும் குட்டி குரங்கு: மனதை பிழியும் வைரல் வீடியோ

Emotional Monkey Video: குட்டி குரங்கு ஒன்று இறந்த தாய் குரங்கின் அருகில் கதறி அழும் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை உலுக்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2023, 11:42 AM IST
  • சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.
  • இது நம் இதயங்களை கசக்கிப்பிழியும் வகையில் உள்ளது.
  • இறந்த தாய் லங்கூர் குரங்கை பார்த்து, அதன் குட்டி கதறி அழும் காணொளி இணையவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்தில் உயிர் இழந்த அம்மா.. கதறி அழும் குட்டி குரங்கு: மனதை பிழியும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

தாயின் இழப்பு என்பது மிகப்பெரிய சோகமான நிகழ்வு. மனிதர்களாக இருந்தாலும் சரி, மிருகங்களாக இருந்தாலும் சரி, தாயின் இழப்பு தாங்கமுடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. மிருகங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளன. 

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இது நம் இதயங்களை கசக்கிப்பிழியும் வகையில் உள்ளது. அஸ்ஸாமில் வேகமாக வந்த கார் மோதி இறந்த தாய் லங்கூர் குரங்கை பார்த்து, அதன் குட்டி கதறி அழும் காணொளி இணையவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வைரலான வீடியோவில், குட்டி லங்கூர் குரங்கு ஒன்று கதறி அழுவதும், இறக்கும் நிலையில் இருக்கும் தாயுடன் ஒட்டிக்கொண்டிருப்பதும் தெரிகிறது.  

குட்டி குரங்கு தாய் குரங்கின் முகத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த குட்டி தனது தாயின் முகத்தைப் பிடித்துக்கொண்டு அதை எழுப்ப முயற்சித்து, தோற்றுப்போகிறது. இந்த காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. 

மேலும் படிக்க | நீர்யானையை கண்டு அஞ்சும் முதலை... காரணம் தெரியுமா...!

இணையவாசிகளை அழ வைத்த அந்த வீடியோவை இங்கு காணலாம்:

வைரலான வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், “இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு என் நினைவில் இருக்கும். அசாமில் ஒரு கோல்டன் லங்கூர் சாலையில் படுகொலை செய்யப்பட்டது. தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் அதன் கையில் இருக்கும் குட்டி தன் தாயை எழுப்புகிறது. குட்டி குரங்கைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியான சில நொடிகளிலேயே வைரல் ஆனது. குட்டி லங்கூர் குரங்கு அழும் வைரல் வீடியோ 122K வியூஸ்களையும், 600 க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் மற்றும் சுமார் 2K லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து, தங்கள் கவலையையும் கோவத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். “இந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான காட்சியை கண்டு என்னால் என் எண்னத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அந்த குட்டி குரங்கின் துக்கமான அழுகை இதயத்தை உலுக்குகிறது." என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: 20 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு விளையாடும் பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News