வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வன விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. குரங்கு, பாம்பு, புலி, சிங்கம், யானை, ஆகியவை இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். இந்த மிருகங்களிம் விடியோகளுக்கு இணையவாசிகளிடம் அதிக மவுசு உள்ளது. இந்த மிருகங்களின் வாழ்வில் அருகில் சென்று பார்க்க முடியாத பல வினோத விஷயங்களை நாம் இந்த வீடியோக்களின் மூலம் காண முடிகின்றது. 


குரங்கு வீடியோகளுக்கென சமூக ஊடகங்களில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில சமயம் இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவித்து நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. சில சமயம் மிக கியூட்டான விஷயங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 


அப்படி ஒரு கியூட்டான வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். அவ்வளவு கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


இந்த வீடியோவில் குரங்கு ஒன்று அனாயாசமாக கேமராவை கையாள்வதை காண முடிகின்றது. இதை பார்த்தால் கண்டிப்பாக அனைவருக்கும் மிக வியப்பாக இருக்கும். ஆனால், வீடியோவில் காணும் இந்த காட்சிகளை நம்பாமலும் இருக்க முடியவில்லை. 


இந்த வீடியோவில் இரண்டு புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. ஒரு புகைப்படக்காரர் குரங்குக்கு கேமராவில் இருக்கும் புகைப்படத்தை காட்டுகிறார். வீடியோவில், குரங்கு தானே கேமராவை கையாண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பதை பார்க்க முடிகின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு ஒரு அற்புதமான கியூட்டான வீடியோவாக உள்ளது. 


மேலும் படிக்க | திடீர்ன்னு இப்படி செய்யாதடா! ஹார்ட் அட்டாக் வந்திரும்! மியாவ் பூனையை மிரள வைத்த வெளவால்


மிக கியூட்டான குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. பிரெஞ்சு இயக்குனரும் புகைப்படக் கலைஞருமான ஜெஸ்ஸி பீரி இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கான jcpieri இல் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். “இந்த வீடியோ அற்புதமானது. குரங்கு மனிதனைப் போலவே புத்திசாலி." என ஒரு பயனர் எழுதியுள்ளார். "நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு அழகான வீடியோவைப் பார்த்துள்ளேன்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஏய் உன்னை சாமிக்கு நேர்ந்து விட்டுட்டாங்களா? இவ்வளவு வால்தனம் பண்றயே! வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ