ஏய் உன்னை சாமிக்கு நேர்ந்து விட்டுட்டாங்களா? இவ்வளவு வால்தனம் பண்றயே! வீடியோ வைரல்

Brilliant Goat Video: கறுப்பு ஆடு தான் குறும்பு பண்ணுமா என்ன? வெள்ளை ஆடு எல்லாம் வெள்ளெந்தி ஆடு அல்ல, குறும்புக்கார ஆடு தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2023, 08:37 PM IST
  • நீ என்ன வம்பு செய்தாலும் நான் அமைதியா இருப்பேன்’
  • குதிரையின் உறுதி நிலைக்குமா? வீடியோ வைரல்
  • ஜாலியா ஹை ஜம்ப் பண்ணா உங்களுக்கு பொறுக்காதா? பொறுமும் ஆட்டுக்குட்டி
ஏய் உன்னை சாமிக்கு நேர்ந்து விட்டுட்டாங்களா? இவ்வளவு வால்தனம் பண்றயே! வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் இன்றைய காலகட்டத்தில் யாராலும் தவிர்க்க முடியாதவை என்ற அளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துவிட்டன. ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு, தினசரி நாம் வாழ்வில் சந்திக்கும் விஷயங்கள் அனைத்தும் இங்கு அரங்கேறுகின்றன. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நல்லதும், கெட்டதுமாக பல செய்திகளை வழங்குகின்றன. பல தகவல்கள் ஆக்கப்பூர்வமானவைகளாக இருந்தால், சில கேளிக்கையானதாக இருக்கிறது. டென்ஷனாக இருந்தா, எடுடா மொபைலை என்று சொல்லும் அளவுக்கு சமூக ஊடகங்கள் மாறிவிட்டன.

இறுக்கத்தை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நாம் நம்ப முடியாத பல விஷயங்களை அசால்டாக செய்துவிடும் விலங்குகள் எப்போதுமே ஆச்சரித்தைத் தருகின்றன.

மேலும் படிக்க | செல்ல நாய்க்காக ராட்சத கரடியுடன் மோதிய நபர்: புகழ்ந்துதள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

அவற்றை, அப்படியே நேரடியாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிரும்போது அதை பார்க்க அனைவருக்கும் ஆவல் ஏற்படுகிறது. , அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பார்த்து மகிழ்கிறோம். இவை நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 

அப்படி ஒரு சவாரி வீடியோ சமீபத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், ஆட்டுக் குட்டியின் குறும்பும், ஹை ஜம்பிங் திறமையும் வெளிப்படுகிறது. டேய் பார்த்து குதிடா என்று சொல்லத் தோன்றும் இந்த வீடியோ வைரலாகிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ -வை பார்த்தால் நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. அதிலும், தன் மேல் ஒரு ஜீவன் வந்து குதிப்பதையும் கண்டுக் கொள்ளாமல், தனது வேலையில் பிசியாக இருக்கும் குதிரையைப் பார்த்தால், இதெல்லாம் எனக்கு சகஜமப்பா என்று அது நினைப்பதைப் போல தோன்றுகிறது.

விளையாட்டுக்கு குதிக்கும் ஆட்டுக்குட்டியின் சேட்டையை ரசிக்கிறதா குதிரை? கறுப்பு ஆடு தான் குறும்பு பண்ணுமா என்ன? வெள்ளை ஆடு எல்லாம் வெள்ளெந்தி ஆடு அல்ல, குறும்புக்கார ஆடு தான்... என்று ஜாலியாக கமெண்ட் வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: சிங்க நடைங்கிறது இது தானா... மெயின் ரொட்டில் வாக்கிங் போகும் சிங்கம்... பீதியில் மக்கள்!

சூப்பர் ஹை ஜம்ப்

சரியாக நேரம் பார்த்து, பின்னே நகர்ந்து சூப்பராக குதித்து, ஆடாமல், கீழே விழாமல் நிற்கும் ஆட்டின் கால்குலேஷன் சூப்பர் என்று சிலர் சொன்னால், ஏய் நீ ரொம்ப குறும்பு, உன்னை சாமிக்கு நேர்ந்து விட்டிருக்காங்களா? என்று சிலர் கடா வெட்டும் ஆவலில் கேட்கவும் செய்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், யார் என்ன கமெண்ட் அடித்தாலும் அதை ஆட்டுக் குட்டியும் பார்க்கப் போவதில்லை, சாவகாசமாய் புல் மேயும் குதிரையும் கண்டுக் கொள்ளப் போவதில்லை, இந்த இரண்டு விலங்குகளுடன் சேர்ந்து அங்கே இருக்கும் வளர்ப்பு பிராணிகளும் கண்டு கொள்ளப் போவதில்லை.

வித்தியாசமான இந்த் வீடியோ, சமூக ஊடக தளமான ட்விட்டரில் @buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கும் குறும்பு செய்யும் ஆசை வந்தால், அதுக்கு நாங்க பொறுப்பு இல்லை.  

மேலும் படிக்க | எல்லாருக்கும் குடுத்து சாப்பிடனும்! அம்மா சொல்லிக் குடுத்திருக்காங்க, குழந்தை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News