வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு, நாய், பூனை, யானை ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு நாய்க்குட்டி மற்றும் குரங்குக்கு இடையேயான மோதலின் வீடியோ வெளிவந்துள்ளது. இதில் இரு மிருகங்களின் நடவடிக்கைகள் பார்க்க மிக வேடிக்கையாக உள்ளன. 


இந்த  வீடியோவில் குரங்கின் கைகள் கட்டப்பட்டிருப்பதையும், நாய்க்குட்டியும் கட்டப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது. இரு விலங்குகளும் ஒன்றோடொன்று சண்டையிடுகிறன. முதலில் குரங்கு நாயை நோக்கி உதைக்கிறது. இதனால் கோபமடைந்த நாய்க்குட்டியும் குரங்கைப் பார்த்து சத்தமாக குரைக்கத் தொடங்குகிறது.


மேலும் படிக்க | திடீரென கையை கடித்த புலி, அலறிய நபர்: திகிலூட்டும் வைரல் வீடியோ


குரங்கு மற்றும் நாயின் சண்டையை இந்த வைரல் வீடியோவில் காணலாம்: 


 



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் puddlehumpur and savage.wilderness என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்து மக்கள் இதை மிகவும் ரசிக்கிறார்கள். இதுவரை 9,200க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி இணையவாசிகள் பலர் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நச்சுனு ஒரு கிஸ்ஸூ.. குரங்கிடம் மயங்கிய பூனை: Viral Video


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ