Viral Video: விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் குரங்கும், பாம்பு, சிங்கம், புலி, யானை ஆகியவற்றின் வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. இவற்றில் பாம்புகளுக்கும் குரங்குகளுக்கும் இணையத்தில் மவுசு அதிகம். பாம்பும் குரங்கும் ஒன்றாக ஒரு வீடியோவில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு குரங்கும் இரண்டு பெரிய நாகப்பாம்புகளும் காணப்படுகின்றன. இதில் நடக்கும் சம்பவம் மிகவும் வித்தியாசமான சம்பவமாக உள்ளது. இதில் நடக்கும் விஷயத்தை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 


வீடியோவின் துவக்கத்தில், ஒரு குரங்கும் நாகப்பாம்பும் நேருக்கு நேர் நிற்பதைக் காண முடிகின்றது, இரண்டுக்கும் இடையில் பெரிய சண்டை வரும் என எண்ணத் தோன்றுகிறது. நாகப்பாம்பிடம் குரங்கு மாட்டிக்கொள்ளுமோ என நமக்கு அச்சம் கூட ஏற்படுகின்றது. ஆனால், அதன் பின் நடப்பவை நாம் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. 


பாம்பு குரங்குக்கு மாலையானது


வீடியோவில் குரங்கு மிகவும் கடுப்பாக இருப்பது போலத் தோன்றுகிறது. அதன் எதிரில் ஒரு நகப்பாம்பு படம் எடுத்து ஆட, மற்றொரு நாகப்பாம்பு கீழே ஊர்ந்துகொண்டு இருக்கின்றது. யாரும் எதிர்பாராத வண்ணம், அந்த குரங்கு திடீரென ஒரு நாகப்பாம்பை எடுத்து மாலை போல தன் கழுத்தில் போட்டுக்கொள்கிறது. மலர் மாலையை அணிந்துகொள்வது போல மிக லாவகமாக அது பாம்பை மாலையாக போடுவதை பார்த்து நாம் மட்டுமல்ல, அந்த மற்றொரு நாகப்பாம்பும் ஆடித்தான் போகிறது. 


மேலும் படிக்க | நான் ஒரு ஐபிஎஸ் ஆபிஸர்! காவல் நிலையத்தில் 18 வயது சிறுவன்! வைரலாகும் வீடியோ!


பாம்பையே ஷாக் ஆக வைத்த குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



படம் எடுத்து ஆடும் பாம்பு


குரங்கின் இந்த செயலை கண்டு அதிர்ந்த மற்றொரு நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுகிறது. அது குரங்கை வெறித்துப் பார்க்கிறது, ஆனால் குரங்கு அதைப் பொருட்படுத்தவில்லை. இந்த காட்சி காண்பவர்களுக்கு மிக வேடிக்கையாக உள்ளது. 


இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் Sanju @ITACHIkamu என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘விலங்குகளின் உலகில் நடக்கும் வினோதமான நிகவ்ழுகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘குரம்பின் செயல் டாப் கிளாஸ்’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | Viral Video: வகுப்பில் பாடம் படிக்க வந்த பாம்பு.... அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவர்கள்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ