இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் MS டோனி, ஓய்வு பெற இருப்பதாக இணையத்தில் வைரலான விஷயத்திற்கு அவரது ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைக்ரோ-ப்ளாக் தளமான ட்விட்டரில் இன்று #DhoniRetires என்னும் ஹாஷ்டேக் திடீரென வைரலாக துவங்கியது. இதன் காரணமாக அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு பெற முடிவு செய்திருக்கலாம் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான அதிராகப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாக நிலையில், வதந்திகளுக்கு பலம் அதிகரித்தது.


இந்நிலையில் டோனியின் ரசிகர்கள், குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேடிக்கையான மீம்ஸ்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள், #DhoniRetires ஹேஷ்டேகினை பிரபலமாக்குபவருக்கு தக்க பதிலடியாய் அமைந்துள்ளது.


எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வரும் நவம்பர் 3-ஆம் நாள் துவங்கும் இத்தொடர் வரும் நவம்பவர் 26-ஆம் நாள் வரை தொடர்கிறது.







இந்நிலையில் சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி BCCI-யால் அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் டோனியின் பெயர் இடம்பெறவில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் டோனியின் இடைவேளை இந்த வதந்திகளுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 


டோனியின் ஓய்வு குறித்து வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பும் பல முறை இவ்வாறான வதந்திகள் இணையத்தில் பரவி, பின்னர் இந்த தகவல்கள் உன்மையுள்ள என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வதந்திக்கு டோனியின் ரசிகர்களே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.