சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைப்பெற்ற போட்டியின் போது சிறுவர்களுடன் சிறுவனாய் அணித்தலைவர் டோனி ஓட்டப்பந்தையத்தில் ஓடியது வைரலாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 18-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாகம் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களான ஷேன் வாட்சனின் மகன், மற்றும் இம்ரான் தாஹிரின் மகன்களுடன் சென்னை அணி தலைவர் டோனியும் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


இந்த தருணத்தின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



IPL தொடரிகளின் போது விளையாட்டு வீரர்கள் பிரபலமாகின்றனரோ இல்லையோ, விளையாட்டு வீரர்களின் வாரிசுகள் பெரும் அளவில் புகழ்ச்சி அடைகின்றனர். அந்த வகையில் டோனியின் ரசிகர்களை விட அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார் அவரது மகள் ஸிவா டோனி. அதேப்போல் சுரேஷ் ரெய்னாவின் மகள் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளார்.


சமீபத்தில் டோனி, ரெய்னாவின் வாரிசுகள் ஒன்றாக விளையாடி இணைய ரசிகர்களை கவர்ந்தனர். இந்நிலையில் தற்போது ஜூனியர் வாட்சன் மற்றும் ஜூனியர் தாஹிர் தற்போது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.