கருணாநிதி மறைந்த நாள் தமிழர்களுக்கான துக்க தினம் -இளையராஜா!
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நாள் தமிழர்களுக்கான துக்க தினம் என இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நாள் தமிழர்களுக்கான துக்க தினம் என இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார்.
இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரசியல் ஆகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும், தமிழாகட்டும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய ஐயா கருணாநிதியின் மறைவு நமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
இந்த தனத்தில் நான் ஆஸ்திரேலியாவில் என்னுடைய இசை குழுவினருடன் இசை நிகழ்சிக்காக வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியானது ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டதால் என்னால் இதை தவிர்க்க முடியவில்லை என மனவருத்தத்துடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.