அனுமன் கோயிலுக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்: இணையத்தில் இதயங்களை வெல்கிறார்
ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிலின் அறங்காவலர்கள் சன்னதியைப் புதுப்பிக்க பாஷாவின் உதவியைக் கோரியபோது, அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக்கொண்டார்.
பெங்களூரு: சில மனிதர்கள் சில சமயம் செய்யும் செயல்கள் மற்றவர் மனங்களில் பெரும் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தி விடுகின்றன. சிலரது செயல்கள் பிறருக்கு பல பாடங்களை புகட்டுகின்றன.
அவ்வகையில், பெங்களூருவில் ஒருவர் செய்துள்ள ஒரு செயல் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வணிகர், ஒரு கோயிலின் புனரமைப்பிற்காக தனது நிலத்தின் ஒரு பகுதியை அக்கம் பக்கத்திலுள்ள இந்துக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது இந்த அசாதாரண சைகைக்காக பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.
பெங்களூருவில் (Bengaluru) உள்ள கடுகோடியில் வசிக்கும் எச்.எம்.ஜி.பாஷா சமீபத்தில் பெங்களூரு-ஹோஸ்கோட் நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயிலை புனரமைப்பதற்காக தனது நிலத்தில் ஒரு பங்கை நன்கொடையாக வழங்கினார்.
பெங்களூரு கிராமப்புறத்தில், வலகரேபுராவில் உள்ள சிறிய அனுமன் கோயிலுக்கு அருகில் சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் 65 வயதான சரக்கு தொழிலதிபர், பக்தர்களுக்கு ஏற்படும் பாதகங்களைப் பார்த்து, தனது நிலத்தில் ஒரு பங்கை கோவிலுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தார்.
"பல பெண்கள் கோயிலை சுற்றும்போது பல பிரச்சனைகளை எதிர்கொள்வதை நான் பார்த்தேன். ஆறு மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்தபோது, எனது நிலத்தின் ஒரு சிறிய பகுதியை நான் அதற்கு கொடுக்க முடிவு செய்தேன். இதனால் மக்கள் அந்த கோயிலில் பிரார்த்தனை செய்வது எளிதாக இருக்கும் என எனக்குத் தோன்றியது” என்று அவர் கூறினார்.
ALSO READ: Aliens: வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக ex-Israeli general பகீர் தகவல்
எனவே, ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிலின் அறங்காவலர்கள் சன்னதியைப் புதுப்பிக்க பாஷாவின் உதவியைக் கோரியபோது, அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக்கொண்டார்.
பாஷாவின் கனிவான இந்த செயலுக்காகவும் அவரது பரந்த மனதுக்காகவும், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோயில் அறக்கட்டளை அவரது புகைப்படத்துடன் சுவரொட்டிகளை வைத்துள்ளது.
சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.5 குன்டாஸ் நிலத்தை பாஷா நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பாஷாவின் செயலை பாராட்டி நெட்டிசன்களும் (Netizens) அவரை வியந்து பாராட்டி வருகின்றனர். அவரது செயல் பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக பலரும் அவரை ஆன்லைனில் (Online) புகழ்ந்து வருகின்றனர்.
ALSO READ: Instagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR