Mysterious King Cobra Viral Video: பாம்பை பார்த்தும் பலரும் அலறி அடித்து ஓடுவார்கள். பாம்பை பார்த்தும் பயப்படாதவர்கள், பதறாதவர்களை காண்பது அரிதுதான். நீங்கள் உங்கள் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் சாந்தமானவராகவும், அச்சப்படாதவராகவும் இருந்தாலும் கூட பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே மனதுக்குள் ஒரு படபடப்பு வருவதை உணர்வீர்கள். இணையத்தில் கொட்டி கிடக்கும் பல பாம்பு குறித்த வைரல் வீடியோக்களும் (Snake Viral Videoes) பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தும் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியிருக்க, கர்நாடகாவின் குடியிருப்பு பகுதியில் அதுவும் வீட்டின் படுக்கை அறையில் பதுங்கியிருந்த ராஜ நாகத்தை பார்த்ததும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் நடந்துள்ளது. படுக்கை அறையின் பரண் மேல் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிக்குள் அந்த 9 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் மறைந்து இருந்துள்ளது. 


9 அடி நீள ராஜ நாகம்


ராஜ நாகத்தை (King Cobra) பார்த்த உடன் குடும்பத்தினர் வனத்துறையை தொடர்புகொண்டு உதவிக்கு அழைப்புவிடுத்துள்ளனர். உடனே வனத்துறை அதிகாரிகள் அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்திற்கு (ARRS) தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்த உடன் பாம்பை மீட்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


மேலும் படிக்க | குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள் - அதிர்ச்சி வீடியோ


அசால்ட்டாக மீட்ட குழுவினர்


அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தின் கள இயக்குநர் அஜய் கிரி இந்த ராஜ நாகத்தை வல்லுநர்கள் பாதுகாப்பாக மீட்டதை வீடியோவாக அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜ நாகத்தை லாவகமாக மீட்கும் அந்த வீடியோவை பார்க்கும்போதே நமக்கு மிரட்சி ஏற்படுகிறது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அதிகாரிகளை தொடர்புகொண்ட போதே, யாரும் அந்த பாம்பின் அருகே செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பான தூரத்தில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.


ராஜ நாகம் வைரல் வீடியோ