Most Fearful King Cobra Viral Video: பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்ற பழமொழியை நீங்கள் நிச்சயம் பலமுறை கேட்டிருப்பீர்கள். பாம்பை திடீரென பார்க்கும் போதெல்லாம் அது உண்மைதான் என்பதையும் நீங்கள் பலமுறை உணர்ந்தீப்பீர்கள். பாம்பு குறித்த இந்த அச்சம் பல நூறு ஆண்டுகளாக மனித இனத்தை தொடர்ந்து வருகிறது. அதனால்தான் பல்வேறு சமூகங்கள் பாம்பை, நாகங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள்.
அந்த வகையில், இன்றைய நவீன யுகத்தில் பாம்பு குறித்த வீடியோவையும் நீங்கள் அதிகம் கடந்து வந்திருப்பீர்கள். அதுவும் மழை காலத்தில் பாம்பு குறித்த தகவல்களுக்கும், இணையத்தில் வீடியோக்களுக்கும் பஞ்சமே இருக்காது எனலாம். வீடியோ என தெரிந்து பார்த்தாலும் கூட அதில் சிலவற்றை பார்த்தாலே நீங்கள் பயப்படுவீர்கள் அல்லவா... அந்த வகையில், வைரலாகி வரும் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தின் வீடியோ பார்ப்போரை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
பார்த்தாலே பீதியாக்கும் வைரல் வீடியோ
கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் மலை கிராமமான அகும்பேவில் வனத்துறையால் அதிகாரிகளால் இந்த 12 ராஜ நாகம் பிடிக்கப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த ராஜ நாகம் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டது. அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தின் (ARRS) கள இயக்குநர் அஜய் கிரி என்பவர் இந்த பிரம்மாண்ட ராஜ நாகத்தின் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை தொடர்ந்து, இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தாவும் அவரது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் பெரிய உடலுடன் நீண்டு படுத்திருக்கும் ராஜ நாகத்தை பார்க்கும்போதே திகிலாக இருக்கிறது. இருக்கிறது. அந்த மீட்புக் குழுவினர் அச்சப்படாமல் அதற்கென பொறிவைத்து, மரத்தில் இருந்து ராஜ நாகத்தை மீட்டு பையில் போட்டனர். இதனை அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக அந்த ராஜ நாகத்தை மீட்டதற்கு சுற்றி நின்ற பொதுமக்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர். ராஜ நாகத்தை மீட்டது மட்டுமின்றி அதனை பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விடுவித்ததையும் அவர்கள் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
இன்ஸ்டா பதிவு
இந்த வீடியோவை வெளியிட்ட அஜய் கிரி அவரது இன்ஸ்டா பதிவில்,"ARRS நிலையத்திற்கு இந்த ராஜ நாகம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அழைத்தபோதே, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து உள்ளூர் மக்களுக்கு விளக்கி, சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.
ஆய்வுக்குப் பிறகு பாம்பை பையில் அடைக்க முடிவு செய்தோம். பாம்பை மெதுவாக பையில் வைக்கப்பட்ட பொறிக்குள் செல்ல வைத்தோம். உள்ளூர் மக்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வை நடத்தினோம். பின்னர் உள்ளூர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் மீட்கும் பல வீடியோக்களை அஜய் கிரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராமை 13 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இவரது அயராது பணிக்கும், துணிவுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிக்கின்றன.
மேலும் படிக்க | இதை பார்த்தா ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆசையே போயிரும்... அலறவைக்கும் வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ