இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், நடுரோட்டில் பாம்புகள் நடுரோட்டில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | வகுப்பறையில் இப்படியா? என்னடா படிக்க சொன்ன பேன் எடுத்துட்டு இருக்கீங்க: வைரல்


வைரலான வீடியோவில், கிராமத்தில் ஒரு சாலையின் நடுவில் கருப்பு பாம்புகள் காணப்படுவதையும், இருவரும் வழியை முழுவதுமாக ஆக்கிரமித்து இருப்பதையும் நீங்கள் காணலாம். மறுபுறம் இரண்டு பைக் ஓட்டுபவர்களும் ஒரு மாட்டு வண்டியும் நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் பைக் ஓட்டுபவர் தனது பைக்கை பக்கத்திலிருந்து எடுக்கிறார், பாம்பு அவரைப் பார்க்கத் தொடங்குகிறது, மறுபுறம் இரண்டாவது பைக் ஓட்டுனர் மிகவும் பயந்து பைக்கில் இருந்து இறங்கி அமைதியாக நடக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த வீடியோவிற்கு மக்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


பாம்பவின் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோவை india.yatra என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிறப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் வந்துள்ள நிலையில், பல்வேறு விதமாக கருத்துகளும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.  


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ‘வாத்துக்கு வாட்டர்மெலன் கொடுத்த வள்ளல்’: கலர் சட்டை குரங்கை கொண்டாடும் நெட்டிசன்ஸ், வைரல் விடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ