ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. மலைகளில் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் ஒருபுறம் நிலச்சரிவால் சேதமடைந்திருக்கும் நிலையில், இன்னொருபுறம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் எல்லாம் இப்போது பாதி வழிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் சாலையோர வாகனங்களில் நின்று கொண்டிருப்பவர்களும் அச்சத்திலேயே இருக்கின்றன. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாய்க்காக சிறுவன் செய்த வேலை: ‘அந்த பையன் காவாலா’..நெகிழும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


குல்லு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் பியாஸ் ஆற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் செல்லும் இந்த ஆறு, ஓர் இடத்தில் சாலையின் பெரும் பகுதியை வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளது. இதனால் எங்க ரோட்டை காணோம் என்ற மைண்ட் வாய்ஸில் மழையை எதிர்கொண்டிருக்கின்றனர் அப்பகுதி மக்கள். இதேபோல் மண்டியிலும் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கோயில் ஒன்று நீரில் மூழ்கியிருப்பதுடன், சாலை இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து அதிவேகத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன.




இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக குல்லு பகுதியிலும் சாலைப் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டிருக்கிறது. மழை இடைவிடாது பெய்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து இப்போது துவங்குவதற்கு சாத்தியமில்லை. பத்ரிநாத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கும் வாகனப்போக்குவரத்து தடைபட்டிருக்கிறது.  கனமழையையொட்டி அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் இருக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மேலும், அப்பகுதி வரும் மக்கள் மழையை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் ஆக்கிரமித்திருக்கும் வீடியோக்கள் இப்போது இணையத்தை வைரலாகிக் கொண்டிருக்கின்றன. 


மேலும் படிக்க | கண்ணாடி பார்த்து கன்பியூஸ் ஆன குரங்கு: குலுங்கி குலுங்கி சிரிப்பீங்க, வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ