வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


அந்தவகையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்களின் வசிப்பிடமாக உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 


அத்துடன் நாள்தோறும் இந்த சாலையில் மைசூரில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் நீலகிரியில் இருந்து மைசூர் செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கண்டு ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது, மைசூர் செல்லும் பந்திப்பூர் சாலையில் வாகனங்கள் சாலையில் வரும்பொழுது நடு ரோட்டில் கரடி ஒன்று ஹாயாக படுத்திருந்தது வாகனங்கள் வருவதைக் கண்ட கரடி மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.