கோடை வெப்பத்தை நீருக்குள் அனுபவிக்கும் பாம்பு: இது தண்ணிப் பாம்பு இல்லை

கைக்குள் பொழுதுபோக்கு அடங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தினமும் பலவிதமான வீடியோக்களை பார்த்து ரசிக்கிறோம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2022, 12:33 PM IST
  • அழகான பாம்பின் நீச்சல் வீடியோ
  • பாம்பு வீடியோக்களை வைரலாக்கும் இணையம்
  • பாம்பின் அழகான வீடியோ வைரலாகிறது
கோடை வெப்பத்தை நீருக்குள் அனுபவிக்கும் பாம்பு: இது தண்ணிப் பாம்பு இல்லை title=

வைரல் வீடியோ: கைக்குள் பொழுதுபோக்கு அடங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தினமும் பலவிதமான வீடியோக்களை பார்த்து ரசிக்கிறோம். 

இணையத்தை இணைக்கும் கைப்பேசியிலும், கணினியிலும் நாம் காணும் வீடியோக்களில் நவரசமான உணர்வுகள் வெளிப்படுகின்றன. நம்மை சோகத்தை ஆழ்த்தும் வீடியோவைப் பார்த்து கவலைப்படும் அடுத்த நொடியே, விலங்குகளின் குறும்பு வீடியோ வந்து மனதை இலகுவாக்கிவிடுகிறது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் பலவிதமான வீடியோக்களில், விலங்குகளின் காதல், மோதல், அன்பு, பாசம் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை பலரும் பார்த்து ரசிக்கின்றனர்.

மேலும் படிக்க | சாவகாசமாய் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் பார்க்கும் பூனைக்குட்டிகள்! 

ரசித்து மகிழ்வதோடு, யாம் பெற்ற இன்பத்தை பிறரும் பெறுவதற்காக பகிர்கின்றனர். பலரும் பார்க்கும் வீடியோக்கள் வைரலாகின்றன. அதிலும் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

தற்போது கோடை வெப்பத்தை தணிக்கும் தண்ணீருக்குள் இருக்கும் பாம்பின் வண்ணமயமான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இது பச்சையும் கருப்பும் கலந்த வித்தியாசமான நிறப் பாம்பு வீடியோ. தண்ணீருக்கும் அங்கும் இங்கும் அலைபாயும் பாம்பின் குட்டி வீடியோ இது.  

தண்ணீருக்குள் பாம்பு நீச்சல்

இந்த வைரல் வீடியோவில், தண்ணீருக்குள் பாம்பு நீந்தி விளையாடுகிறது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அதன் உடல் முழுவதும் தெரியவில்லை. ஒரு சில நொடிகளே தோன்றும் பாம்பின் அலைபாயல், நம் மனதை கொள்ளை கொள்கிறது.

வீடியோவில் இருக்கும் பாம்பு அழகா, அதன் வண்ணம் அழகா என்ற கேள்விக்கு பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும். தண்ணீருக்கும் மெதுவாக ஒய்யார நீச்சல் அடிக்கும் பச்சை பாம்பு வீடியோ பீதியை ஏற்படுத்தவில்லை. ஏற்படுகிறது. 

மேலும் படிக்க | பிரிந்த குழந்தையுடன் சேரும் ஸ்லாத் அம்மா: கண் கலங்க வைக்கும் க்யூட் பாசமலர்கள்

பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என்று சொன்னதெல்லாம் அதை நேரில் பார்ப்பது பற்றியே என்பதால், இந்த வீடியோ, பலரால் பார்க்கப்பட்ட பாம்பு வீடியோ என்ற பெயரை பெற்றுள்ளது.  

பாம்பிடமிருந்து விலகி இருக்கவே அனைவரும் ஆசைப்படுவார்கள் என்றாலும், வீடியோவாக பார்க்க மக்கள் அதிகம் விரும்புவது பாம்பைத்தான் என்பதும் அதிசயமான உண்மை.

பாம்பு எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை கணிக்க முடியாவிட்டாலும், வீடியோவில் இருந்து பாம்பு நேரில் வந்துவிடாது என்ற தைரியமே பாம்பு வீடியோக்கள் வைரலாவதற்கு காரணம். அழகு என்பதும் அச்சம் என்பதும் பார்ப்பவரின் கண்களிலும், உணர்பவர்களின் குணத்தின் அடிப்படையிலும் தான் என்பதை இந்த இணைய உலகம் தொடர்ந்து உணர்த்தி வருகிறது.

மேலும் படிக்க | ஹலோ கொஞ்சம் தள்ளுங்க, நான் சாப்பிடணும்: பூனைகளிடம் மாஸ் காட்டிய எலி, வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News