ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ஜிப்ஸி திரைப்படத்தின் டீஸர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறிய ராஜுமுருகன் ’குக்கூ' படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர். இதையடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கிய அவர் தேசிய விருது வென்றதோடு, இரண்டே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் தரமான இயக்குநராக உயர்ந்துள்ளார்.


இதனையடத்து ராஜூ முருகன் தனது மூன்றாவது படமாக 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



இத்திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். மாறுபட்ட தலைப்பை கொண்டு உருவாகும் இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.


சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மதத்தை புறம் தள்ளும் காதல், கம்யூனிசம், சமூகநலம் என பல சாயல்களை இந்த டீஸரில் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக டீஸரில் இடம்பெற்றுள்ள "மதம் பிடிக்காத மனுச ஜாதிங்க..", "நாகூர் ஆண்டவரே..." போன்ற வசனங்கள் பார்பவர்களை கவர்ந்துள்ளது. படத்தின் வெளியிட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை, விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.