மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் 'யாத்ரா' திரைப்படதின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள நடிகர் மம்முட்டி 20 ஆண்டுகளுக்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் நேரடிக நடிக்கும் திரைப்படம் யாத்ரா. ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் YSR ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றினை கதையாக கொண்டு இப்படம் உருவாகிறது. இப்படம் தெலுகில் வெளியாகும் அதே வேலையில் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியாகிறது.



2004-ஆம் ஆண்டு YSR ரெட்டி மேற்கொண்ட அரசியல் பாதயாத்திரையும், அரசியலில் அது ஏற்படுத்திய மாற்றமும் இப்படத்தின் கதை ஆகும்.


இயக்குநர் மகி.வி.ராகவ் இப்படத்தினை இயக்குகிறார். தவிர, ராவ் ரமேஷ், ஜெகபதி பாபு, சுஹாசினி, போசனி கிருஷ்ண முரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 


‘70mm எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் இப்படத்தினை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கே இசையமைத்து வரும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.


இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.