புதுடெல்லி: சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி  வந்த வண்ணம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கானது இன்று முடக்கப்பட்டது. அதை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் அதில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான படங்களை பதிவு செய்தனர். மேலும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, எனவே இன்று முதல் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வோம் என பதிவு செய்யப்பட்டிருந்தது.


துருக்கியை சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. டுவிட்டர் கணக்கை முடக்கிய நபர்கள் அதிலிருந்து சில முக்கிய தகவல்களை திருடியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். 


பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் இணையதளம் இயங்க தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.