வைரல் வீடியோ: வாழ்க்கையில் மனதை லேசாக்கும் வேலையை யாரால் தொடர்ந்து செய்ய முடியும்? இடைவிடாது தொடர்ந்து சேவை செய்து வரும் சமூக ஊடகங்களை நாம் திட்டத் தான் செய்கிறோம் என்றாலும், அது தன் பாட்டிற்கு பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் தான் இருக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகள் அறிவுக்கு தீனி போடுபவை. மனதில் இருக்கும் வருத்தங்களை போக்கும் இணையத்தை, இணக்கமில்லாமல் பேசலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்கள் மனதிற்கு இதமளிக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் மனதை வருடிக் கொடுக்கின்றன, சிலவற்றில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. சமூக ஊடகத்தை மையப்படுத்தியே வாழும் அளவுக்கு சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துவிட்டது.


சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நமக்கு போதையை ஏற்றுகின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன என்றல் அது மிகையாகாது.


மேலும் படிக்க | Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்!


அதிலும் விலங்குகளின் பேரன்பும், அப்பாவித்தனமும் அனைவரையும் மயக்குபவை. எப்போதாவது ஒரு முறை மட்டுமே பார்க்கக் கிடைத்து வந்த அபூர்வ காட்சிகளை சமூக ஊடகங்கள் இப்போது இயல்பாக்கிவிட்டன. அதிலும், செல்லப் பிராணிகள், அவற்றின் குறும்புகள் முதல் கடூரமான விலங்குகளுக்கும் மென்மையான பக்கம் இருப்பதை உணர்த்தும் வீடியோக்கள் என அதிர்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தும் வீடியோக்களை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.


இந்த வீடியோவைப் பார்த்தால், பிரமித்து போய், அடுத்து என்ன என்பதே மறந்து போய்விடுகிறது. மனதை கொள்ளைக் கொள்ளும் செல்லங்களில் அசத்தும் அழகு வீடியோவைப் பார்த்தால் கண்ணேறு கழிக்கத் தோன்றுகிறது.



பார்த்தாலே பரவசம் தரும் வீடியோவில், அப்பாவிக் குட்டிகளின் விளையாட்டு மூடும், அதை பொறுத்துக் கொண்டு கோபமில்லாமல், தனது வேலையை கடமையே கண்ணாயிரம் என்பதுபோல செய்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்தால், அவரும் அந்தக் குறும்புகளை எஞ்ஞாய் செய்கிறார் என்று தோன்றுகிறது.  


அன்புப் பரவசம் 


மனிதர்களை பரவசப்படுத்தும் இயற்கையின் அதிசயங்களில் அன்பு என்ற உணர்ச்சி இல்லாவிட்டால், வாழ்க்கையே போர்க்களமாகிவிடும். வைரலாகி வரும் வீடியோவில், செல்லங்களில் ஆக்‌ஷன் ஸோ க்யூட் என்றால், மனிதர்களின் பொருமையே அவர்களுக்கு பெருமை என்றும் புரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் மயக்கிவருகிறது.  


மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ