Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்!

கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2023, 12:25 PM IST
  • நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் கிளிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
  • கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படும் பறவைகள். .
  • வைரலாகும் கிளி வீடியோ.
Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்! title=

சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை அதிகம் செலவிடுகிறார்கள். வேடிக்கையான வீடியோக்களைப் பார்ப்பதன் அன்றாட மன அழுத்தங்களின் இருந்து நிவாரணம் கிடைப்பதே இதற்கான முக்கிய காரணம். தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்க இவை பெரிதும் உதவுகின்றன. தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் மக்களுக்கு உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கிளி வீடியோ ஒன்று தற்போது மிகவும் வைரலாகி வருகின்றன.

கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில்,  கிளிகள் இரண்டு பேசிக் கொள்ளும்.. இல்லை இல்லை சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. வாயில் பிஸ்கெட்டுடன் இருக்கும் ஒரு கிளி தன்னிடம் இருக்கும் பிஸ்கெட்டை பறிக்க வந்த மற்றோரு கிளியை வார்த்தைகளாலேயே வாட்டி வதைத்து பிஸ்கெட்டை கொடுக்காமல் திட்டி தீர்க்கிறது. கிளி பாஷை உங்களுக்கு தெரிந்திருந்தால் அது என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.. கிளி பாஷை தெரியாதவர்களும் இதனை நன்றாக ரசிக்கலாம். 

வைரலாகும் கிளி வீடியோவை இங்கே காணலாம்:

சில நாட்களுக்கு  முன் வைரலான கிளி வீடியோவில், பஞ்சவர்ணக்கிளி ஒன்று அசால்ட்கா தனது மூக்கையே வீச்சறுவாளாக பயன்படுத்தி வெட்டிக் குடித்த வீடியோ மிகவும் வைரலானது. அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும் படிக்க | என் மூக்கே வீச்சறுவா தான்... இளநீரை வெட்டி அசால்டாக குடிக்கும் ‘கில்லாடி’ கிளி!

கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக  காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை.  ஆனால் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் கிளிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. சில நாட்களுக்கு முன் வைரலான கிளி வீடியோ ஒன்றில், கிளிகள் இணைந்து கூடைப்பந்து விளையாடுவதைக் காணலாம். இவை மிகவும் திறன்பட விளையாடுவதை கீழ் உள்ள இணைப்பில் காணலாம்

மேலும் படிக்க | கில்லாடி கிளிகள்... ஒலிம்பிக் போட்டிக்கு இவற்றை அனுப்பினால் பதக்கம் நிச்சயம்!

கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என கூறப்படுகிறது . கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. 

சில நாட்களுக்கு மின் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த வீடியோவில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடும் கழுகு, தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக வலுமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!

சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதிலும், ட்ரோல்களைப் படிப்பதிலும் செலவிடுகிறார்கள். மக்கள் தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் நேரம் இது. தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் மக்களுக்கு உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News