பாம்பு vs கீரி.. இப்படியொரு ஃபைட் அ எங்கையும் பார்த்திருக்க மாட்டீங்க: வீடியோ வைரல்

Mongoose and Cobra Fight: கீரிக்கும் பாம்புக்கும் உள்ள பகை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். கீரியைக் கண்டதும் பாம்பு தன் உயிரைக் காப்பாற்ற ஓடத் தொடங்கும் அதே வேளையில், கீரி பாம்பைக் கண்டு அதைக் கொல்ல ஓடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 16, 2023, 05:44 PM IST
  • நாகப்பாம்பு vs கீரிப்பிள்ளையின் சண்டை வீடியோ
  • நாகப்பாம்பும் கீரிப்பிள்ளை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன
பாம்பு vs கீரி.. இப்படியொரு ஃபைட் அ எங்கையும் பார்த்திருக்க மாட்டீங்க: வீடியோ வைரல் title=

கீரிப்பிள்ளை மற்றும் நாகப்பாம்பு சண்டை: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன பாம்பு ஒரு அபாயகரமான விலங்கினம். இதை கண்டால் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே எண்ணுவார்கள். அப்படிப்பட்ட பாம்பை எந்த வித ஆபத்தும் இல்லாமல் அருகில் காண இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று மிருகக்காட்சி சாலை, மற்றொன்று சமூக ஊடகம். பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. 

தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வெளிவந்துள்ளது. இதில் பாம்பும் கீரிப்பிள்ளையும் சண்டையிடும் காட்சி காணப்படுகின்றது. பொதுவாக நாகப்பாம்பு உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. அது ஒருவரைக் கடித்தால், அவர் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை. பொதுவாக மனிதர்கள் பாம்பின் பெயரைக் கேட்டாலே நடுங்கத் தொடங்குகிவிடுவார்கள். ஆனால் இந்த பாம்பு ஒரு உயிரினத்திற்கு மட்டும் பயப்படும், அது கீரிப்பிள்ளை ஆகும். உண்மையில், கீரிப்பிள்ளை மற்றும் பாம்பு இடையே உள்ள பகை மிகவும் பழமையானது. பாம்பு யாருக்கும் பயப்படாவிட்டாலும், கீரிப்பிள்ளையை கண்டால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடத் தொடங்கும். ஏனெனில் கீரிப்பிள்ளை பாம்பை பார்த்தவுடன் அதை தாக்கி கொல்லத் தான் முயற்சிக்கும். இன்று சமூக வலைதளங்களில் அப்படி ஒரு காணொளியை தான் நாம் பார்க்க உள்ளோம். இதில் நாகப்பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

நாகப்பாம்பும் கீரிப்பிள்ளை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன
நாகப்பாம்பை பார்த்த கீரிப்பிள்ளை அதன் அருகில் சென்று தாக்குவதை இந்த வீடியோவில் காணலாம். கீரிப்பிள்ளையின் தாக்குதலைத் தவிர்க்க, நாகப்பாம்பும் கீரிப்பிள்ளையைத் தாக்குகிறது, ஆனால் கீரிப்பிள்ளை பயமின்றி நாகப்பாம்பை எதிர்கொள்கிறது, பின்னர், இருவரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்குகின்றது. நாகப்பாம்பு கீரிப்பிள்ளையை அதன் முகத்தைத் தாக்குகிறது, ஆனால் எதற்கும் அசராத் கீரிப்பிள்ளை மேலே குதித்து அந்தப் பாம்பின் முகத்தைப் பிடித்து தரையில் தேய்த்து கடித்து குதறிவிடுகிறது.

மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்

நாகப்பாம்பு vs கீரிப்பிள்ளையின் சண்டை வீடியோவை இங்கே காணுங்கள்:

கீரிப்பிள்ளையின் பிடியில் இருந்து வெளியேற, நாகப்பாம்பு சுருளத் தொடங்குகிறது, ஆனால் அதன் தந்திரங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. கீரிப்பிள்ளையின் நாகப்பாம்பின் முகத்தைப் பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்து, அதன் முகத்தை தொடர்ந்து கடித்துக் கொண்டே இருக்கும். இறுதியில், கீரிப்பிள்ளையின் பிடியில் இருந்து நாகப்பாம்பு தப்பித்தவுடன், கீரிப்பிள்ளையின் அதை மீண்டும் தாக்குகிறது. கீரிப்பிள்ளையின் இந்த தாக்குதலில் நாகப்பாம்பு இறந்துவிடுகிறது. இந்த வீடியோ இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மக்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News