வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சில சமயங்களில் நாம் அதிக ஆர்வம் இல்லாமல் வேண்டாவெறுப்பாக சாப்பிடுவும் சில உணவுகளின் சுவை நம்மை ஆச்சரியப்படுத்துவது உண்டு. பொதுவாக குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிடிக்கும், ஆனால், முதியவர்களுக்கு இவை பிடிப்பதில்லை. வயதானவர்கள் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். 


மேலும் படிக்க | ஆற்றில் குதித்து மாஸ் காட்டும் லூட்டி பாட்டி: ‘வாவ்’ என வாய் பிளக்கும் நெட்டிசன்கள்


ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு பாட்டி பிரெஞ்ச் ஃப்ரைஸ் மீது காதல் கொள்வதை காண முடிகின்றது. முதலில் இதை சாப்பிட பாட்டி மறுக்கிறார். ஆனால், ஒரு முறை சுவைத்த பின்னர், அவர் பிரெஞ்ச் ப்ரைசுக்கு அடிமையாகிவிடுகிறார். இப்போது நிலைமை என்னவென்றால், தன் வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் பிரெஞ்ச் ஃப்ரைஸ் கேட்டு சாப்பிட்டு ரசிக்கிறாராம். 


பாட்டியை ஃபேன் ஆக்கிய பிரஞ்சு ஃப்ரைஸ் 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பேரன் பிரெஞ்ச் ஃப்ரைஸ் கொண்டு வரும் போது, ​​சோபாவில் பாட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. ஆனால், பாட்டி பாக்கெட்டைப் பார்த்ததும் எழுந்து, பிரெஞ்ச் ஃப்ரைஸ் பாக்கெட்டில் பேரி-பெரி மசாலாவைக் கலந்து சுவைக்கத் தொடங்குகிறார். 


பாட்டியின் பேரன் அவரிடம் அதன் சுவை பற்றி கேட்கிறார். அதற்கு அவர் தலையை ஆட்டியபடியே மிகவும் நன்றாக உள்ளதாக கூறுகிறார். பாட்டியின் இந்த அழகான வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. 


பாட்டியின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்:



முன்பு சாப்பிட மறுத்தார்


பாட்டியின் இந்த வைரல் வீடியோ jaipareekandviniandjai என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவில்,  "நாங்கள் மெக்டொனால்டு கடைகளில் இருந்து உணவு வாங்கி சென்றோம். ஆனால் பாட்டி அதை சாப்பிட மறுத்து, 'நீயே இந்த குப்பையை சாப்பிடு’ என்பது போன்ற ரியாக்‌ஷனை கொடுத்தார். 15-20 நிமிடங்கள் எங்களது விடாமுயற்சிக்குப் பிறகு, அதை சுவைத்து பார்க்க ஒப்புக்கொண்டார். இப்போதெல்லாம், உங்களுக்காக என்ன வாங்கி வர வேண்டும் என அவரிடம் கேட்கும்போதெல்லாம், “அந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் மிளகாய் பொடி வாங்கி வா” என்று கூறுகிறார். பிறகு அதை எப்படி கலக்க வேண்டும் என்று அவருக்கு விளக்கினேன். இப்போது அவர் அதை ஆர்வத்துடன் சாப்பிடுகிறாளர்." என்று எழுதப்பட்டுள்ளது.


இந்த வீடியோவை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். பாட்டியின் ரியாக்‌ஷன் பார்க்க படு கியூட்டாக உள்ளது!!


மேலும் படிக்க | சாமி பாட்டுக்கு செமயா குத்தாட்டம் போட்ட மணமக்கள்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR