Viral Video: கழுதைப்புலிகளிடம் சிக்கி தவித்த சிங்கம்; காப்பாற்றிய நட்புகள்

வைரல் வீடியோ:  சில கழுதைப்புலிகள் கூட்டமாக கூடி இணைந்து சிங்கத்தை குறிவைத்து தாக்கும் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2022, 06:29 PM IST
  • சில கழுதைப் புலிகள் கூட்டமாக வந்து சிங்கத்தை குறிவைத்து தாக்குகிறது.
  • தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல், சிங்கம் தவிக்கிறது.
Viral Video: கழுதைப்புலிகளிடம் சிக்கி தவித்த சிங்கம்; காப்பாற்றிய நட்புகள் title=

சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. எந்த விலங்கும் அதனை பகைத்துக் கொள்ள விரும்பாது, சண்டையிடவும் துணியாது. 

ஆனால் சில நேரங்களில் இந்த சிங்கமும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. சில விலங்குகள் கூட்டம் அவர்களைச் சுற்றி வரும் போது தங்கள் பலத்தை அவ்வப்போது காட்ட நினைக்கின்றன. 

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சில கழுதைப் புலிகள் கூட்டமாக வந்து சிங்கத்தை குறிவைத்து  தாக்குகிறது. அவர்களது தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல், தவிக்கிறது. ஆனால் பின்னர் அதன் நண்பர்கள் வந்து கழுதை புலியிடம் இருந்து அதனை காக்கிறது. சிங்கம் மற்றும் கழுதைப்புலியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் சிங்கத்தின் மீது கழுதைப்புலிக் கூட்டம் எப்படி ஒன்று சேர்ந்து தாக்குகிறது என்பதை பார்க்கலாம். சிங்கம் தவித்த நிலையில், நண்பர்கள் ஆபத்பாந்தவனாக வந்து கழுதைப்புலிகளை விரட்டி காப்பாற்றின.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

இந்த வீடியோ ஐஎஃப்எஸ் அதிகாரி அனுபம் சர்மாவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. வீடியோவுக்கு ஒரு சுவாரஸ்யமான தலைப்பைக் கொடுத்து, 'எனக்கு பள்ளி நாட்களை நினைவூட்டியது: "என் நண்பர்கள் நான்கு பேர் வரட்டும், பிறகு நான் உங்களை ஒரு கை பார்க்கிறேன்' என அதில் எழுதியுள்ளார்.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ பல சமூக ஊடக பயனர்களுக்கு அவர்களின் பள்ளி நாட்களை நினைவூட்டுகிறது, மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, ​​ஆம், இது பள்ளி வாழ்க்கையிலும் நடக்கும் என்று எழுதினர். 

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News