Watch! சிக்சரில் கோலிக்கு டஃப் கொடுக்கும் தாத்தா..
வீதி கிரிக்கெட்டில் தாத்தா ஒருவர் செம எனர்ஜியுடன் பந்தை அடித்துவிட்டு ஓடும் வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இண்டர்நேஷனல் கிரிக்கெட்டை பார்க்கும்போது கிடைக்கும் அதே ஃபீலிங், உள்ளூர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவது தான் ரசிகர்களின் ஸ்டைல். சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இருக்கும் ரூல்ஸ் மற்றும் வயது வரம்பு எல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் கிடையாது. போட்டி நடக்கும் இடத்தில் வைப்பது தான் சட்டம், ரூல்ஸ் எல்லாமே.
ALSO READ | BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்..!
விளையாடும் இடத்துக்கு ஏற்ப ரூல்ஸூம் மாறும். 5 வயது குழந்தை முதல் 90 வயது தாத்தா வரை எல்லாருமே பிளேயர்ஸ் தான். ஊர் மக்கள் புடைசூழ, அப்படியான மேட்சை பார்த்தீர்கள் என்றால் செம ஜாலியாக இருக்கும். இப்போது இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் வீடியோவும், இந்த ரகமே. ஊர் இளைஞர்கள் புடை சூழ்ந்திருக்கும் இடத்தில் தாத்தா செம எனர்ஜியுடன் விளையாடுகிறார்.
பந்தை தூக்கியடிக்கும் அவர், சிகசர் அடித்ததுபோல் துள்ளிக் குதிக்கிறார். அவர் பந்தை அசால்டாக அடிப்பது, சுற்றியிருக்கும் இளைஞர்களுக்கும் குஷியை ஏற்படுத்திருகிறது. அவர் பந்தை அடித்ததைக் காட்டிலும், அந்தப் பந்தை அடித்துவிடும் அவர் செய்யும் ரகளை தான் செம ஹைலட். டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன், விராட் கோலி மற்றும் பிசிசிஐ டேக் செய்து இந்திய அணிக்கான அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார் என நக்கலாக எழுதியுள்ளார்.
ALSO READ | கோலி திருமணமே செய்து இருக்கக் கூடாது: அப்ரிடி சர்ச்சை கருத்து!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR