அட ஒண்ணுமில்லபா.. வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கு: தாத்தாவின் மூளையை பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
Funny Old Man Video: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு நபர் கண்டுபிடித்திருக்கும் ஒரு தீர்வின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நாட்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், மதியம் வெயிலில், சாலையில் நடமாட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயிலின் காரணமாக உடலுக்கு பல பிரச்சனைகள் வருவதோடு உடல் சோர்வும் அதிகமாகிறது. எனினும், சிலரால் வெளியே செல்லாமலும் இருக்க முடியாது. வெயிலோ, குளிரோ, மழையோ, சிலர் தங்கள் தொழிலுக்காகவும், வெறு சில முக்கியமான விஷயங்கள் காரணமாகவும் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் பற்றிய பல செய்திகளை நாம் சமூக ஊடகங்களில் காண்கிறோம்.
இப்படிப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு நபர் கண்டுபிடித்திருக்கும் ஒரு தீர்வின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மறுபுறம், அந்த நபரின் சமயோஜித புத்தியைப் பார்த்து, அனைவரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.
பொதுவாக, வீணான பொருட்களைப் பயன்படுத்தி சில ஆச்சரியமான மற்றும் பயனுள்ள விஷயங்களைச் செய்யும் மக்கள் உலகம் முழுவதும் பலர் இருக்கின்றனர். சாதாரண மனிதனால் கற்பனை செய்ய முடியாத அளவு பல அரிய பொருட்களை இவர்கள் செய்கிறார்கள். சமீப காலங்களில், சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட பொருட்களின் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சிலர் தங்கள் மூளையைப் பயன்படுத்தி பல கடினமான பணிகளை மிக எளிதாக செய்து விடுவதை பார்க்க முடிகின்றது.
மேலும் படிக்க | அம்மா போல அன்பை பொழியும் நாய்: வைரல் வீடியோ
வெயிலை ஏமாற்ற ஒரு ஐடியா
வைரலாகி வரும் வீடியோ -வில், கொளுத்தும் வெயிலில் சாலையில் முதியவர் ஒருவர் சைக்கிளில் செல்வதைக் காண முடிகின்றது. கடும் வெயிலில் சைக்கிள் ஓட்டுவது அதிக சோர்வை ஏற்படுத்தும் ஒரு பணியாகும். அத்தகைய சூழ்நிலையில், வெயிலிலிருந்து தப்பிக்க, அந்த நபர் சைக்கிளை சுற்றி மரச்சட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன் கீழ் சிறிய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த நபர் சைக்கிள் ஓட்டும் போது எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கின்றது.
தாத்தாவின் மாஸ் பிளானை இந்த வீடியோவில் காணலாம்:
மேலும் படிக்க | மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்ட குட்டி பாப்பாவும், மானும்: கியூட் வீடியோ வைரல்
இணையத்தில் வீடியோ வைரல் ஆனது
மேலும், அந்த நபர் மரச்சட்டத்தின் மேல் துணியைப் போட்டுள்ளார். இதனால் சாலையில் சைக்கிள் ஓட்டி செல்லும் போது வெயிலில் இருந்து நிவாரணம் பெறுகிறார். பெரும்பாலான பயனர்கள் இந்த அற்புதமான வழியைக் கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர். இதன் காரணமாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தி எழுதப்படும் வரை சமூக ஊடகங்களில் இந்த வீடியோவுக்கு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான, அதாவது 22 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன.இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ