’தம்பி அது பொம்மை இல்ல... நாகப்பாம்பு’ பாம்புடன் விளையாடும் குழந்தை வீடியோ வைரல்..!

குழந்தை ஒன்று பாம்பை பொம்மை என நினைத்துக் கொண்டு விளையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2023, 09:59 PM IST
  • பாம்பு உடன் விளையாடும் குழந்தை
  • பொம்மை என நினைத்துவிட்டதா?
  • இணையத்தில் வைரலான வீடியோ

Trending Photos

’தம்பி அது பொம்மை இல்ல... நாகப்பாம்பு’ பாம்புடன் விளையாடும் குழந்தை வீடியோ வைரல்..! title=

பாம்பு என்றாலே அனைவருக்கும் கொலை நடங்கும். அதுவும் நம் கண்முன் பாம்பு நின்றால் நம்மில் பலருக்கு வியர்த்து கொட்டிவிடும். ஆனால் இளம்கன்று பயமறியது என்பது போல் குழந்தைகளுக்கு பாம்பு என்றால் உயிரை பறிக்கும் உயிரனம் என்றா தெரியும். அவர்களுக்கு அதுவும் ஒரு விளையாட்டு பொருளாகவே இருக்கும். அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு குழந்தை பாம்பை பிடித்துள்ளது. விஷமுள்ளதாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படும் நாகப்பாம்பு ஒன்று குழந்தையின் முன் வந்துள்ளது. அந்த பாம்பை சிறுவன் கையில் பிடிக்கும் திக்.. திக் வீடியோ தான் வைரலாகி உள்ளது.

மேலும் படிக்க | பாம்பை மென்று சாப்பிட்ட நபர்..அதுவும் உயிருடன்..திக் திக் சம்பவம்

இந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் மிகவும் சிறியவன் என்பதால் சரியாக பேசவும் நடக்கவும் முடியாது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிறுவனுக்கு முன்னால் ஒரு நீண்ட ஆபத்தான நாகப்பாம்பு உள்ளது. பாம்பை பார்த்த சிறுவன் கை நீட்டி அதை பிடிக்க முயல்கிறான். அதன் பிறகு அந்த பாம்பை பலமுறை பிடித்து வைத்துள்ளார். பாம்பு சிறியவரின் மேல் செல்கிறது. அதுவும் அவன் வாய்க்கு அருகில் செல்கிறது. அதை பார்த்தாலே நமக்கு பயமாக இருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajibul Islam (@rajibul9078)

இந்த வீடியோ 30 வினாடிகள் மட்டுமே உள்ளது. வீடியோ முடியும் வரை கூட பாம்பு சிறுவனை காயப்படுத்தியதாக தெரியவில்லை. ஆனால் பாம்பு மிகவும் அச்சுறுத்தும் வகையில் காட்சியளிக்கிறது, சிறுவன் இவ்வளவு ஆபத்தான உயிரினத்துடன் இருப்பதை பார்ப்பதைக் கண்டு நம் இதயம் துடிக்கிறது.

இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பிறகு, ஒரு பயனர் பாம்பின் பற்களை பிடுங்கி அதன் விஷத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோவை எடுக்க சிறுவனின் பெற்றோர் அனுமதித்ததாக பலர் தங்கள் கோபத்தையும் கொட்டி தீர்த்துள்ளனர். 

மேலும் படிக்க | அடிச்சிக்காதீங்கப்பா.. நிறுத்துங்க: நெட்டிசன்களை கடுப்பேற்றிய நாய் குரங்கு சண்டை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News