மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்ட குட்டி பாப்பாவும், மானும்: கியூட் வீடியோ வைரல்

Little Girl Feeding Deer: மனிதர்கள் விலங்குகளை நன்றாக நடத்தும்போது, அதுவும் அப்படியே நம்மை நடத்தும். அதன்படி இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 25, 2023, 10:58 AM IST
  • சிறுமியின் கியூட் வைரல் வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்ட குட்டி பாப்பாவும், மானும்: கியூட் வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்கள் நம்மை சில சமயம் வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன. சில சமயம் மவுனமாக புன்னகைக்க வைக்கின்றன. அதுவும் குழந்தைகளின் வீடியோக்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவும் மிக அழகாக, கியூட்டாக உள்ளது. இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்துள்ளது இந்த வீடியோ.

மேலும் படிக்க | ’தம்பி அது பொம்மை இல்ல... நாகப்பாம்பு’ பாம்புடன் விளையாடும் குழந்தை வீடியோ வைரல்..!

மானுக்கு உணவளிக்கும் சிறுமியின் கியூட் வீடியோ
சில குழந்தைகள் விலங்குகளைக் கண்டு பயப்படுவார்கள், அதுவே சில குழந்தைகள் குறும்பு செய்வார்கள். அவர்களில் அந்த விலங்குடம், விளையாடும் போது விலங்குகளுடன் நட்பு கொண்டுவிடுவார்கள். இதேபோல், ஒரு அழகான பெண் மானுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற செயல் ஜப்பானில் மட்டுமே நடக்கும்
வெறும் 7 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பில், இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு அழகான சிறுமி அங்கிருந்த மானை பார்த்தவுடன் அதன் பக்கம் செல்வதைக் காணலாம். அதனுடம் அந்த சிறுமி தனது கையில் எதையோ வைத்திருக்கிறார். மானை நெருங்கிய உடன், அதை நோக்கி கையை நீட்டுகிறாள், மான் தன் வாயை முன்னோக்கி நீட்டி, சிறுமியின் கையிலிருந்து உணவை உண்ணுகிறது. அதன் பிறகு, சிறுமி அந்த மானுக்கு தலை குனிந்து வணங்குவதை நாம் வீடியோவில் காணலாம். இதைப் பார்த்த மானும் அந்தச் சிறுமிக்கு அப்படியே வாழ்த்தத் தெரிவிக்கிறது. இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அந்த பெண் மான் முன் குனிந்த விதம் ஜப்பானில் கடைபிடிக்கப்படுகிறது என்பது சிறப்பு.

சிறுமியின் கியூட் வைரல் வீடியோ: 
மே 23 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது தவிர 23 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பயனர்களும் தங்கள் கருத்துக்களைக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த கியூட்டான வைரல் வீடியோ @TheFigen_ enkira ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ‘கியூட்’, ‘மிக அழகு’ என பயனர்கள் இந்த வீடியோவை புகழந்து வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ‘இப்படி ஒரு பொண்ணுதான் எனக்கு மனைவியா வேணும்’: நெட்டிசன்களை புலம்ப வைத்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News