வைரல் வீடியோ: இணையத்தில் பல வித வீடியோக்கள் தினமும் வெளியாகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் வெளிவந்த உடனேயே வைரல் ஆகின்றன. நாம் நமது தினசரி வாழ்வில் காண முடியாத பல வித நிகழ்வுகளையும் சம்பவங்களையும் இந்த வீடியோக்களில் கண்டு களிக்கொறோம். இதைத் தவிர சமூக ஊடகங்களில் வெளிவரும் பல கேளிக்கை வீடியோக்கள் நம்மை மகிழ்விக்கின்றன, சிரிக்க வைக்கின்றன. இவற்றை பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் துயரங்களையும் சிறிது நேரத்திற்கு மறக்கிறோம். இவை நமது மன அழுத்தங்களை அகற்றி மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. இது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில் சில பெண்களுக்கு இடையே சாதாரணமாக துவங்கிய ஒரு சண்டை மோசமான சண்டையாக மாறுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ ஏறக்குறைய ஒரு நிமிடம் உள்ளது. இதில், ஒரு உணவகத்தில் மக்கள் உணவை சுவைத்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது. அப்போது, மூன்று பெண்களுக்கு இடையில் திடீரென சண்டை துவங்குகிறது. இதில் இரண்டு பெண்கள் ஒரு தரப்பிலும் ஒரு பெண் ஒரு தரப்பிலும் இருக்கிறார்கள். 


மேலும் படிக்க | கட்டிப்பிடித்து ‘பை’ சொல்ல ஓடி வந்த காதலிக்கு நேர்ந்த கதி: வைரல் வீடியோ 


வாக்குவாதம் அடி உதை வரை சென்றது


இந்த வீடியோவை பார்த்தால், இரு பெண்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து அருகில் நின்ற மற்றொரு பெண்ணிடம் சென்று தகராறு செய்தது தெரிகிறது. இருவரும் அந்த பெண்ணை பின்னால் செல்லும்படி கேட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அந்த பெண் பின்வாங்காமல் அவர்களுக்கு முன்னால் அப்படியே நிற்கிறார். 


வீடியோவில் இதற்கு பிறகு காணப்படும் விஷயம் ஆச்சரியத்தை அளிக்கின்றது. இரு தரப்புக்கும் இடையே லேசாக துவங்கிய வாக்குவாதம், அடி, உதை வரை செல்கிறது. இதில் ஒரு பெண் மற்ற இருவரையும் பலமாக அடித்து விடுகிறார். இருவரும் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருவரையும் கொடூரமாக அந்த பெண் அடிக்கிறார். 


பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட பயங்கர சண்டையின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ @ViciousVideos என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. மக்களும் அந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. மேலும் இணையவாசிகள் இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | அம்மா.. அம்மா.. பாசத்தை அள்ளி பொழியும் நாய் குட்டிகளின் வைரல் வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ