வயித்த கலக்குதுனு ‘அங்க’ போனா கதியே கலங்கி போச்சு: டாய்லெடில் பாம்பு, வைரல் வீடியோ

Scary Snake Viral Video: பீதியை கிளப்பும் இந்த பாம்பு வீடியோ இணையத்தில் பட்டயை கிளப்பி வருகிறது. பாம்பு ஒளிந்திருக்கும் இடத்தை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 12:41 PM IST
  • பாத்ரூமில் பதுங்கிய பாம்பு.
  • பாம்பை அகற்ற கடும் போராட்டம்.
  • வைரலான வீடியோ.
வயித்த கலக்குதுனு ‘அங்க’ போனா கதியே கலங்கி போச்சு: டாய்லெடில் பாம்பு, வைரல் வீடியோ  title=

பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக பாம்புகளை கண்டால் யாரும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அங்கிருந்து ஓடி விடுவார்கள். அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ 

யாரும் எதிர்பார்க்காத இடங்களில் ஒளிந்துகொள்வதும், யார் கண்ணிலும் படாமல் பதுங்கிக்கொள்வதும் அவற்றுக்கு கை வந்த கலையாகும். பாம்பை பார்த்தால் சப்த நாடியும் அடங்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டாம். ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு இடத்தில்தான் இந்த வீடியோவில் பாம்பு ஒளிந்து இருக்கிறது. இந்த வீடியோ பீதியை கிளப்பும் வகையில் உள்ளது, ஏனெனில், ஒரு பாம்பு கழிப்பறையிலிருந்து வெளியே வழுக்கிச் செல்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

ஒரு டாய்லெட் பவுலிலிருந்து ஒரு பாம்பு வெளியே வருவதையும், அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி அகற்ற ஒரு நபர் முயல்வதையும் இந்த வீடியோவில் காண முடிகின்றது. இப்படி ஒரு நிகழ்வு நம் வீட்டில் நடந்தால் என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே கதி கலங்குகிறது. நாம் அவசரமாக கழிப்பறைக்கு சென்று அமரும்போது திடீரென அதில் ஒரு பாம்பு  இருந்தால், நம் கதி அதோகதிதான்!!

இந்த வீடியோவில், கழிவறை இருக்கையின் பவுலில் பாம்பு மறைந்திருப்பது தெரிகிறது. மீட்புக் குழுவினரும் அதை வெளியே எடுக்க மிகவும் போராட வேண்டியிருந்தது. கழிப்பறைக்கு சென்றவர் அதை பார்க்காமல் இருந்திருந்தால், பாம்பு அவரை கடித்திருக்கக்கூடும். அதை நினைத்தாலே பீதி கிளம்புகிறது. இதை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ghantaa என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

பக்காவா பிளான் பண்ணி பாம்பு ஒளிந்த விதத்தை இந்த வீடியோவில் காணலாம்: 

இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு பல வித ரியாக்‌ஷன்களை அளித்துள்ளனர். ஒரு பயனர், ‘எனக்கு இதை பார்க்கவே பயமாக உள்ளது’ என்று எழுதியுள்ளார். மற்றொருவர், ‘ நினைக்கவே பீதியை கிளப்புகிறது’ என்று கூறியுள்ளார். இப்படி இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News