அம்மா.. அம்மா.. பாசத்தை அள்ளி பொழியும் நாய் குட்டிகளின் வைரல் வீடியோ!

தனக்கு தினமும் உணவளிக்கும் பெண்ணை கண்டதும் தெருநாய்கள் ஓடிச்சென்று அந்த பெண்ணிடம் பாசமாக கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2022, 07:46 AM IST
  • பெண்ணை சுற்றி வளைத்து பாசத்தை பொழியும் நாய்கள்.
  • பாசத்தில் திக்குமுக்காடிய பெண்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
அம்மா.. அம்மா.. பாசத்தை அள்ளி பொழியும் நாய் குட்டிகளின் வைரல் வீடியோ! title=

ஒருவருடன் நாம் கொள்ளும் நட்பானது வயது, பாலினம், தகுதி, மதம் ஆகியவற்றை கடந்தது, மனிதர்களுடன் கொள்ளும் நட்பு மட்டும் தான் சிறந்தது என்றால் இல்லை.  மனிதர்கள்-மனிதர்களுடன் கொண்டிருக்கும் நட்புணர்வை காட்டிலும் மனிதர்கள்-விலங்குகளிடையே உள்ள நட்புணர்வு சிறந்ததாக கருதப்படுகிறது.  மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை அடிக்கடி நாம் இணையதளங்கள் வாயிலாக கண்டு ரசித்து வருகிறோம்.  தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோவில் ஒரு பெண்ணை நாய் கூட்டங்கள் சூழ்ந்து கொண்டு பாசமழையை பொழிகின்ற காட்சி பலரையும் மனம் நெகிழ செய்துள்ளது.

இந்த வீடியோவை முதன்முதலில் அஜய் ஜோ என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார், பின்னர் இந்த வீடியோவை ஹர்ஷ் கோயங்கா நண்பர்கள் தினத்தன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  இதுபோன்றதொரு நட்பை இதுவரை பார்த்ததில்லை என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், ஒரு பெண்ணை கண்டதும் தெருநாய்கள் பல அவரை சூழ்ந்துகொண்டு பாசமாக அவர்மேல் விழுந்து கொஞ்சுகிறது.  அந்த பெண்ணும் அந்த நாய்களை சந்தோஷமாக அரவணைத்து கொண்டு பாசமழையை பொழிகிறார்.  இதனை பார்க்கும்பொழுது அந்த பெண் தினமும் இந்த நாய்களுக்கு உணவு அளிப்பர் போலும், அதனால் அந்த நாய்கள் அவரை அடையாளம் கண்டதும் பாசமாக ஓடிச்செல்கிறது.  

 

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

இந்த வீடியோ இணையாவசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது, கடந்த ஆகஸ்ட்-7ம் தேதி இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை  53,000க்கும் அதிகமான இணையாவசிகள் கண்டு ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் பலரும் ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News