கோழியால் இவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆச்சர்யமூட்டும் வீடியோ!
![கோழியால் இவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆச்சர்யமூட்டும் வீடியோ! கோழியால் இவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆச்சர்யமூட்டும் வீடியோ!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/08/28/244775-hen.jpg?itok=14S8ZfJ9)
கோழி ஒன்று பெரிய ஏரியின் ஒரு கரையில் நின்றுகொண்டு நீண்ட தொலைவிலுள்ள மற்றொரு கரைக்கு அசால்ட்டாக பறந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்துண்ணி வகையை சேர்ந்த கோழியினங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படுகிறது. நாம் வீடுகளில் வளர்க்கும் கோழிகளால் நீண்ட தூரத்திற்கு பறக்க முடியாது, அதுவே எடை குறைவாக இருக்கும் சில கோழிகளால் வேலிகளை தாண்டியோ அல்லது மரங்களுக்கு இடையிலோ பறக்க முடியும். ஆனால் அவற்றால் நீண்ட தூரத்திற்கு பறக்க முடியாது, அவை மற்ற பறவையினங்கள் போல எப்போதும் பறப்பவையல்ல அவற்றிற்கு ஏதேனும் ஆபத்து நேரிடும்போதோ அல்லது சில சமயங்களிலோ மட்டும் தான் கோழிகள் பறக்கின்றன. இதுவரை நாம் கோழியினங்கள் மற்ற பறவைகளை போல நீண்ட தூரத்திற்கு பறந்து செல்வதை பார்த்திருக்க மாட்டோம், தற்போது கோழி ஒன்று நீண்ட தூரத்திற்கு பறந்து செல்லும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு இணையாவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த ஆச்சர்யமான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு பெரிய ஏரி ஒன்று தெரிகிறது, அதில் சிமென்ட் பாதை போட்ட ஒரு கரையில் வெண்மை நிறத்தில் கோழி ஒன்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டு இருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கோழி இறக்கைகளை விரித்துகொண்டு பறக்க ஆரம்பிக்கிறது, அது பறப்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் குறைந்த தூரம் மட்டுமே பறக்கும் திறம் கொண்ட கோழியானது பெரிய பரப்பளவு கொண்ட ஒரு பெரிய ஏரியை அசால்ட்டாக பறந்து அடுத்த கரைக்கு சென்று விடுகிறது.
இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பிரமிப்புடன் பார்த்து வருகின்றனர், இந்த வீசிடியோவிற்கு இதுவரை ஐயாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ