இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில், முதலைகள் நிறைந்த ஆற்றில் சிறுவன் தத்தளித்துக் கொண்டிருக்கும் வீடியோ, உங்களை அச்சத்தில் உறைய வைக்கும்.
மனதை பதற வைக்கும் வீடியோவில், ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அதே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் முதலைகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள அவர் போராடுவதையும் காணலாம். முதலைகளும் அவரைச் சுற்றி வருவதைக் காணலாம். அதிர்ஷ்டவசமாக, நீரில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற மீட்புக் குழு விரைவில் படகில் வந்து சேர்ந்தது. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழு முதலைகளுக்கு இரையாகாமல் தப்பிக்க போராடி வந்த சிறுவனை விரைவாக படகில் இழுத்து காப்பாற்றுவதை வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோ சம்பல் ஆற்றில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் சரியாகத் தெரியவில்லை.
நீரில் மூழ்கும் குழந்தையை மீட்புக் குழுவினர் காப்பாற்றுவதைப் கீழே பகிர்ந்துள்ள வீடியோவில் காணலாம்:
This is real heroic deed. Chambal river, crocodiles and the fighter kid. Salute to the rescue team. #Chambal pic.twitter.com/MvNVLV5pVy
— Dr Bhageerath Choudhary IRS (@DrBhageerathIRS) August 24, 2022
இந்த வீடியோவை உத்திரபிரதேச போலீஸ் அதிகாரி சச்சின் கௌசிக் பகிர்ந்துள்ளார். மேலும், பாகீராத் சவுத்ரி என்னும் IRS அதிகாரியும் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த உத்திரபிரதேச போலீஸ் அதிகாரி, “இது ஒரு திரைப்படத்தைப் போன்ற பரபரப்பான காட்சி, ரீல் அல்ல, ரியல் காட்சி! இந்த குழந்தை சம்பல் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதன் பின்னால் முதலைகள் துரத்துகின்றன. மீட்புக் குழுவினர் சரியான நேரத்தில் வந்து சிறுவனை கையைப் பிடித்து இழுத்துச் சென்றனர். ஜெய்ஹிந்த்!” என பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ