வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யானைகள் புத்திசாலித்தனமான விலங்குகள், சமூக விலங்குகள். ஆனால், அவற்றை யாரேனும் தூண்டி விட்டாலோ அல்லது அச்சுறுத்தினாலோ அவற்றுக்கு கோவம் வந்துவிடும். அவற்றுக்கு பிரச்சனை வராத வரை அவை யாருக்கும் எந்த தொந்தரவையும் ஏற்படுத்தாது. 


சமீபத்தில் ஒரு சஃபாரி பூங்காவில் யானை ஒன்று ஜீப்பை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த நிகழ்வு படமாக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சாகேத் படோலா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 125 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்று வைரலாகியுள்ளது.


வீடியோவில், சஃபாரி பூங்காவில் ஒரு சாலை வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஜீப் ஒன்றை யானை ஒன்று துரத்துவதைக் காண முடிகிறது. யானை விடாமல் துரத்தியதால், ஜீப்பின் ஓட்டுனர் வாகனத்தை வேகமாகப் பின்னோக்கி ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று. யானை கோபத்துடன் ஜீப்பை நோக்கி வந்துகொண்டே இருப்பதையும் வீடியோவில் காண்கிறோம். தன் இடம் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும் விஷயம் யானைக்கு பிடிக்கவில்லை. இது அதற்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியதால், யானை அவர்களை அங்கிருந்து துரத்த நினைக்கிறது. 


மேலும் படிக்க | அட நம்புங்க..பார்த்தா பார்த்துக்கிட்டே இருப்பீங்க: ஆடு, குரங்கின் கியூட் வைரல் வீடியோ


கார் பாதுகாப்பான தூரத்திற்கு பின்வாங்கிய பிறகு, யானை கோபத்துடன் எக்காளம் செய்வதையும் பின்னர் காட்டை நோக்கி திரும்புவதையும் காண முடிகின்றது. யானை காட்டை நோக்கி திரும்பியவுடன், ஜீப் ஓட்டுனர் ஜீப்பை நிறுத்துகிறார். பயணிகளின் முகத்தில் அச்சம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 


ஜீப்பை விடாமல் துரத்தும் யானையின் வீடியோவை இங்கே காணலாம்



"டிரைவரின் திறமை மற்றும் அவரது கூல் ஆட்டிட்யூட் பாராட்டத்தக்கது. இது எளிதான சூழ்நிலை அல்ல. இருப்பினும், யானையின் எரிச்சலுக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும், ” என்று IFS அதிகாரி வீடியோவுடன் ட்வீட்டில் எழுட்தியுள்ளார். 


யானை இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என ட்விட்டர் பயனர்கள் கேள்வி கேட்ட் வருகின்றனர். சஃபாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த வீடியோவில் பலர் யானை மீது அக்கறை காட்டும் அதே வேளையில் ஜீப் ஓட்டுனரின் பக்குவத்தையும் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க | போட்றா தம்பி பிரேக்க... தண்ணீரில் வழுக்கி விழும் நாயின் வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ