வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை காலம் உச்சத்தில் உள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கின்றது. இதனால் சிலர் விடுமுறை நாட்களில் மலை பிரதேசங்களுக்குச் செல்வதைக் காண முடிகின்றது. இன்னும் சிலர் வெப்பத்தைத் தவிர்க்க தங்களால் ஆன பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். கோடை காலம் பற்றிய பல வேடிக்கையான ஜோக்குகளையும் மீம்ஸ்களையும் நாம் சமூக ஊடகங்களில் காண்கிறோம். 


ஆனால், கோடையிலும் பல சமயம் நம்மால் வெளியே செல்லாமல் இருக்க முடிவதில்லை. அலுவலகம், ஷாப்பிங், சொந்த பணிகள் என நாம் கண்டிப்பாக எங்காவது செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை காத்துக்கொள்வது பெரும் பாடாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வெப்பத்தைத் தவிர்க்க அவர் செய்துள்ள வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சமூக ஊடகங்களில் தினமும் பல வித வினோத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை பயனர்களை கவரும் வகையில் இருக்கின்றன. சிலர் இந்த வீடியோக்களை பார்த்து தாங்களும் அப்படி செய்ய முயற்சிப்பதையும் காண முடிகின்றது. சமீபத்தில், சமூக வலைதளங்களில் வெளியான ஆடோ டிரைவரின் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் கட்டப்பட்டிருப்பதை காண முடிகின்றது. அதை பார்த்து சாலையில் கூட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.


ஆட்டோவில் கூலர் போட்ட வள்ளல்


வழக்கமாக, வெப்பத்தைத் தவிர்க்க, சிலர் தங்கள் கார்களில் மாட்டு சாணத்தை பூசுவதை நாம் பார்த்துள்ளோம். ​​சிலர் தங்கள் வாகனங்களின் கூரையில் புல் வளர்ப்பதையும் சமீப காலங்களில் பார்த்துள்ளோம். ஆனால், இந்த நாட்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு ஆட்டோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆட்டோ டிரைவர் தானும், தனது ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகளும் வெயிலிலிருந்து தப்பிக்க ஆட்டோவில் கூலரை பொருத்தி இருக்கிறார். 


மேலும் படிக்க | உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ


ட்டகாசமான ஆட்டோ பயணத்தை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது, ஏகப்பட்ட வியூஸ்களைப் பெற்றது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் kabir_setia என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை, சமூக ஊடகங்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் அதை விரும்பியுள்ளனர். மேலும் 2.7 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் அதைப் பார்த்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


‘இந்த ஆட்டோகாரருக்கு நல்ல மனசு’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘இவர் ஒரு பணக்கார ஆட்டோ டிரைவராக இருப்பார்’ என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். ‘கூலர் காத்துக்கு கூடுதல் காசா?’ என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். மற்றொருவர், ‘ஆட்டோக்கார அண்ணன் பொதுமக்களைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்.’ என அவரை பாராட்டியுள்ளார். 


மேலும் படிக்க | முத்தம் கொடுத்த பெண்ணின் மூக்கை பதம்பார்த்த பாம்பு: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ